தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி? லாபமா நஷ்டமா?

by -54 views

விலைமதிப்பற்ற உலோகங்கள் எத்தனையோ இருந்தாலும் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீதுதான் எப்போதுமே ஆர்வம் அதிகம். அதன் தன்மை, மதிப்பு ஆகியவற்றையெல்லாம் தாண்டி தங்கம் ஒரு கௌரவமிக்க பொருளாகப் பார்க்கப்படுகிறது. தங்கத்தை வைத்திருப்பது வசதி மற்றும் மரியாதைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது.

தங்கம் என்பது அவ்வளவுதானா? அதை விடச் சிறந்தது தங்கம் ஒரு சிறந்த முதலீட்டுப் பொருளாகும். முதலீடு செய்பவர்கள் தங்கத்துக்கு 15 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் தங்கம் என்பது மக்களால் மிகவும் விரும்பப்படும் முதலீடுகளில் ஒன்றாக உள்ளது.

தங்கத்தை நகை, நாணயங்கள், கட்டிகள் போன்ற வடிவில் நாம் வாங்கி வைக்கலாம். அதேபோல, தங்கப் பரிவர்த்தனை-வர்த்தக நிதிகள் (gold ETF), தங்க நிதி, தங்க முதலீட்டுப் பத்திரம் போன்ற பல வடிவங்களில் நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்கத்தின் விலையில் எப்போதாவது வீழ்ச்சி ஏற்பட்டாலும் பொதுவாகவே தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டேதான் இருக்கும்.

தங்கத்தில் முதலீடு செய்ய நீங்கள் முடிவு செய்தவுடன், எவ்வாறு முதலீடு செய்வது என்று திட்டமிட வேண்டும். தங்க முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் தங்கத்தை வாங்குவதற்கும் முதலீடு செய்வதற்கும் பல்வேறு வழிகள் உள்ளன. ஆன்லைனிலும் நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம். நேரடியாக நகைக் கடைக்குச் சென்று தங்க நகைகளாகவோ, நாணயங்களாகவோ வாங்கி வைக்கலாம். தங்கத்தின் விலை உயரும்போது அதை நீங்கள் விற்றுவிடலாம்.

உடனே நகை கடைக்கு ஓடுங்க! தங்கம் விலை குறைஞ்சிருக்கு!

அதேபோல, தங்க முதலீட்டுப் பத்திரங்கள் அரசு தரப்பிலிருந்து விற்பனை செய்யப்படும். அதிலும் முதலீடு செய்யலாம். இதில் ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி கிடைக்கும். ஆன்லைன் மூலமாக பத்திரம் வாங்கினால் அதற்கும் சலுகை உண்டு. கோல்டு ஃபண்ட் திட்டங்களும் சிறந்த தேர்வாக இருக்கும். ஆக்சிஸ் பேங்க் ஃபண்ட், ஆதித்ய பிர்லா சன் லைஃப் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், கனராரொபெக்கோ கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி கோல்டு ஃபண்ட் போன்ற திட்டங்களில் நல்ல லாபம் கிடைக்கிறது.

நேரடித் தங்கமாக வாங்கும்போது ரூ.2 லட்சத்துக்கு மேல் வாங்கினால் பான் கார்டு கட்டாயம். கோல்டு ஈடிஎஃப் திட்டத்தில் வாங்கினால் தரகு நிறுவனத்துடன் டீமட் அக்கவுண்ட் திறக்க வேண்டும். தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்வதற்கு கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயம். ஆதார் கார்டு, வோட்டர் ஐடி போன்றவையும் தேவைப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *