தங்கத்தில் முதலீடு செய்யலாமா? லாபமா, நஷ்டமா?

by -25 views

தங்கம் என்பது இந்தியர்கள் மத்தியில் எப்போதுமே மதிப்பு மிக்க பொருளாக இருந்து வருகிறது. அதை வைத்திருப்பது கௌரவம் என்று நினைப்பவர்களும் உண்டு. உண்மையில் அது மிகச் சிறந்த முதலீட்டுப் பொருளாகும். இப்போது சேர்த்து வைக்கும் மிகச் சிறிய தங்கம் எதிர்காலத்தில் பெரிய அளவில் கைகொடுக்கும். கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும் சமயங்களில் மற்றவர்களிடம் கையேந்தி நிற்பதை விட, கையில் இருக்கும் நகையை வைத்து அந்த நெருக்கடியைச் சமாளிக்கலாம்.

முன்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சேமிப்பில் ஈடுபடுவார்கள். தபால் நிலையம், வங்கி, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், நிலம் போன்ற பல்வேறு விஷயங்களில் பணத்தை சேமித்து வைப்பார்கள். ஆனால் இப்போது இளைஞர்களும், மாணவர்களும் கூட முதலீட்டில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். அதுவும் கொரோனா வந்தபிறகு நாட்டு மக்கள் அனைவருக்குமே முதலீடு மற்றும் சேமிப்பின் முக்கியத்துவம் தெரியவந்துள்ளது.

முதலீடு செய்ய நினைக்கும் இளைஞர்களுக்கு தங்கம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். நேரடித் தங்கத்திலோ அல்லது டிஜிட்டல் தங்கத்திலோ முதலீடு செய்யலாம். டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. அனைவரிடமுமே ஸ்மார்ட்போன்கள் இருப்பதால் அதில் பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற ஆப்களில் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யும் வசதி உள்ளது. மற்ற முதலீட்டுத் திட்டங்களை ஒப்பிடும்போது, தங்கம் அதிகளவில் லாபம் தருவதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Gold Rate: தங்கம் விலை அதிரடி உயர்வு!

கடந்த 10 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் பங்குச் சந்தையில் 130 சதவீத ரிட்டன் கிடைத்துள்ளது. ஆனால் தங்கத்தில் 134 சதவீத ரிட்டன் கிடைத்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பணவீக்கம் போன்ற காரணிகளால் தங்கத்தின் மதிப்பின் பாதிப்பு ஏற்படுவதில்லை. அதேபோல, தங்கத்தை வாங்க சரியான நேரம், கெட்ட நேரம் என எதுவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் வாங்கி வைக்கலாம். முதலீட்டில் இறங்கும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் தங்கம் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மார்க் மோயியஸ் போன்ற முதலீட்டாளர்கள், ஒட்டுமொத்த முதலீட்டில் தங்கம் 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *