தக்காளி, வெங்காயம்… தங்கத்தோடு போட்டி போடும் காய்கறி விலை!

by -28 views

சென்ற மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்ததால் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். காய்கறி வாங்குவதற்கே பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதாக இருந்தது. இந்த மாதமும் விலையேற்றம் நீடிக்கிறது. கடந்த நான்கு நாட்களாகவே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலைப் பட்டியல் என்ன என்று பார்க்கலாம்.

சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை நேற்று 35 ரூபாயிலிருந்து இன்று 40 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, வெங்காயம் விலை நேற்று 20 ரூபாயிலிருந்து இன்று 24 ரூபாய்க்கு வந்துள்ளது. சற்று ஆறுதல் தரும் விதமாக அவரைக்காய் விலை 40 ரூபாயிலிருந்து 20 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. முருங்கைக்காய் விலை 30 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ கேரட் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold rate: விலைய கேட்டா நெஞ்சு வலியே வந்திடும்!

காய்கறி விலைப் பட்டியல்!

தக்காளி – ரூ.40
வெங்காயம் – ரூ.24
அவரைக்காய் – ரூ.20
பீன்ஸ் – 25
பீட்ரூட் – ரூ.10
வெண்டைக்காய் – ரூ.10
நூக்கல் – ரூ.10
உருளைக் கிழங்கு – ரூ.16
முள்ளங்கி – ரூ.10
புடலங்காய் – ரூ.10
சுரைக்காய் – ரூ.5
பாகற்காய் – ரூ.10
கத்தரிக்காய் – ரூ.10
குடை மிளகாய் – ரூ.20
கேரட் – ரூ.35
காளிபிளவர் – ரூ.20
சவுசவு – ரூ.7
தேங்காய் – ரூ.20
வெள்ளரிக்காய் – ரூ.7
முருங்கைக்காய் – ரூ.30
இஞ்சி – ரூ.40
பச்சை மிளகாய் – ரூ.15
கோவைக்காய் – ரூ.10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *