தக்காளி வாங்கணும்னா லோன் வாங்கணும்!

by -48 views
தக்காளி வாங்கணும்னா லோன் வாங்கணும்!
தக்காளி வாங்கணும்னா லோன் வாங்கணும்!

நாட்டின் பல்வேறு இடங்களில் காய்கறி உற்பத்தி செய்யும் பகுதிகளில் கனமழை பெய்வதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு வரும் காய்கறி வரத்து குறைந்து தேவை அதிகரித்துள்ளது. அதுவும் கார்த்திகை மாதம் என்பதால் காய்கறிகளுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து நிற்கிறது.

சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று (நவம்பர் 23) ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாயாக உள்ளது. சில்லறை விற்பனையில் பல்வேறு இடங்களில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் விலை 36 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ அவரைக்காய் 70 ரூபாய்க்கும், கேரட் 65 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் விலை 100 ரூபாய்க்குச் சென்றுள்ளது. சென்னையில் இப்போது நிறைய காய்கறிகளின் விலை 100 ரூபாயை எட்டிவிட்டது.

நான்தான் “தக்காளி” பேசறேன்…!
காய்கறி விலைப் பட்டியல்!

தக்காளி – ரூ.100
வெங்காயம் – ரூ.36
அவரைக்காய் – ரூ.70
பீன்ஸ் – 60
பீட்ரூட் – ரூ.45
வெண்டைக்காய் – ரூ.100
நூக்கல் – ரூ.50
உருளைக் கிழங்கு – ரூ.33
முள்ளங்கி – ரூ.55
புடலங்காய் – ரூ.70
சுரைக்காய் – ரூ.100
பாகற்காய் – ரூ.80
கத்தரிக்காய் – ரூ.60
குடை மிளகாய் – ரூ.70
கேரட் – ரூ.65
காளிபிளவர் – ரூ.50
சவுசவு – ரூ.15
தேங்காய் – ரூ.32
வெள்ளரிக்காய் – ரூ.20
முருங்கைக்காய் – ரூ.100
இஞ்சி – ரூ.60
பச்சை மிளகாய் – ரூ.30
கோவைக்காய் – ரூ.55

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *