டெபிட் கார்டிலேயே EMI வந்தாச்சு.. தீபாவளிக்கு வந்த ஸ்வீட் நியூஸ்!

by -25 views

ஹைலைட்ஸ்:

  • தீபாவளி ஷாப்பிங் இப்போ ரொம்ப ஈசி
  • டெபிட் கார்டு EMI திட்டம் அறிமுகம்

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்காலம் நெருங்கியுள்ளதால் பொதுமக்களிடையே ஷாப்பிங் மனநிலை பரவலாகியுள்ளது. ஏற்கெனவே பல நிறுவனங்கள் ஷாப்பிங் சலுகைகளை அறிவித்துள்ளன.

இந்நிலையில், மக்கள் ஈசியாக ஷாப்பிங் செய்யும் வகையில் இண்டஸ் இண்ட் வங்கி (IndusInd Bank) டெபிட் கார்டு EMI திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சேவையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பெரும் தொகையில் பொருள் வாங்கி அதற்கான கட்டணத்தை EMIஆக மாற்றிக்கொள்ள முடியும்.

ஏற்கெனவே சில EMI கார்டுகள் மார்க்கெட்டில் உள்ளன. இதுபோக கிரெடிட் கார்டு வைத்திருப்போர் ஈசியாக EMIயில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். எனினும், டெபிட் கார்டுகளிலேயே EMI மூலம் பொருள் வாங்கும் வசதிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

எல்லாருக்கும் சம்பள உயர்வு.. இந்திய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
இதையடுத்து சில முன்னணி வங்கிகள் டெபிட் கார்டு EMI வசதியை அறிமுகப்படுத்தின. இந்நிலையில், இண்டஸ் இண்ட் வங்கியும் டெபிட் கார்டு EMI வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

நேரடியாக ஷாப்பிங் செய்யும்போது மட்டுமல்லாமல், ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போதும் டெபிட் கார்டு EMI பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக இந்தியா முழுவதும் 60000க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், ஹைப்பர் மார்க்கெட்டுகளுடன் இண்டஸ் இண்ட் வங்கி கூட்டணி அமைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *