சேமிக்கும் பணம் இரண்டாகப் பெருகும் திட்டங்கள்!

by -58 views

பணத்தைச் சேமித்து வைக்க அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் எங்கே சேமித்து வைப்பது என்பதுதான் பெரிய கேள்வியே! எந்தத் திட்டத்தில் அதிக லாபம் கிடைக்கும், எந்தத் திட்டத்தில் சேமிப்புப் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றெல்லாம் யோசிப்பார்கள். அதற்காகவே அரசு செயல்படுத்தும் திட்டங்களைப் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர். இதில் லாபம் குறைவு என்றாலும் பாதுகாப்பு அதிகம் என்பதால் இதுபோன்ற திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.

அதேபோல, மிக விரைவாகவே பெரிய பணக்காரர் ஆகிவிட வேண்டும் என்றும் சிலர் நினைப்பார்கள். அதற்கு சரியான திட்டத்தில் பார்த்து முதலீடு செய்ய வேண்டும். வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் நிறைய சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் சில திட்டங்கள் குறுகிய காலத்திலேயே உங்களது பணத்தை இருமடங்காக்கித் தரும். அப்படிப்பட்ட திட்டங்களும் அவற்றின் வட்டி விகிதம் மற்றும் இரட்டிப்பு காலம் குறித்து இங்கே பார்க்கலாம்.

விதி 72இன் கீழ் வட்டி விகிதத்தை வைத்து எவ்வளவு சீக்கிரம் முதலீட்டுப் பணம் இருமடங்காகும் என்று கண்டுபிடிக்கலாம். சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதத்தை வைத்து 72ஐ வகுக்கும் போது இரட்டிப்பு காலம் எவ்வளவு என்று தெரியும்.

வங்கிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையான வைப்பு நிதி திட்டத்தில் 5.5 சதவீத வட்டி கிடைக்கிறது. இதில் பணம் செலுத்தினால் 13 ஆண்டுகளில் உங்களது பணம் இரட்டிப்பாகும். (72/5.5 = 13.09)

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி கிடைப்பதால் 10 ஆண்டுகளில் உங்களது பணம் இரட்டிப்பாகும். (72/7.1 = 10.14)

அதேபோல, சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் 9.4 ஆண்டுகளில் பணம் இருமடங்காகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *