சென்னை மக்களோடு விளையாடும் காய்கறி விலை!

by -52 views

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைதான் 100 ரூபாயைத் தாண்டிச் சென்றது என்றால் தக்காளி விலையும் 100 ரூபாயைத் தாண்டி அதிர்ச்சியளித்தது. சென்னையில் கனமழை காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மழை குறைந்து காய்கறி விலையும் குறையத் தொடங்கியது. ஆனால் இப்போது மீண்டும் காய்கறிகளின் விலை மேலே செல்கிறது. குறிப்பாக தக்காளி விலை மீண்டும் 100 ரூபாயை எட்டியுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று (நவம்பர் 18) ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 80 ரூபாயாக மட்டுமே இருந்தது. எனினும் வெங்காயம் விலை 35 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகக் குறைந்துள்ளது. அவரைக்காய் விலை 60 ரூபாயிலிருந்து 65 ரூபாயாக அதிகரித்துள்ளது. கத்திரிக்காய் விலையும் 60 ரூபாயிலிருந்து 65 ரூபாய்க்குச் சென்றுள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறி விலைப் பட்டியல்!

தக்காளி – ரூ.100
வெங்காயம் – ரூ.30
அவரைக்காய் – ரூ.65
பீன்ஸ் – 50
பீட்ரூட் – ரூ.45
வெண்டைக்காய் – ரூ.80
நூக்கல் – ரூ.50
உருளைக் கிழங்கு – ரூ.30
முள்ளங்கி – ரூ.25
புடலங்காய் – ரூ.60
சுரைக்காய் – ரூ.55
பாகற்காய் – ரூ.55
கத்தரிக்காய் – ரூ.65
குடை மிளகாய் – ரூ.80
கேரட் – ரூ.55
காளிபிளவர் – ரூ.50
சவுசவு – ரூ.12
தேங்காய் – ரூ.32
வெள்ளரிக்காய் – ரூ.20
முருங்கைக்காய் – ரூ.90
இஞ்சி – ரூ.65
பச்சை மிளகாய் – ரூ.25
கோவைக்காய் – ரூ.35

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *