சென்செக்ஸ் கடந்து வந்த பாதை.. ஒரு சுவாரஸ்ய வரலாறு!

by -26 views

ஹைலைட்ஸ்:

  • சென்செக்ஸ் இண்டெக்ஸின் வரலாறு
  • சென்செக்ஸ் கடந்து வந்த மைல்கற்கள்

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் நேற்று முதல்முறையாக 60000 புள்ளிகளை தாண்டியது. கொரோனா நெருக்கடி காலகட்டத்திலும் சென்செக்ஸ் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது பாசிட்டிவான விஷயமாக பார்க்கப்படுகிறது. சென்செக்ஸ் 60000 புள்ளிகளை தாண்டியதை மும்பை பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

சென்செக்ஸ் தற்போது 60,048.47 புள்ளிகளாக உள்ளது. சென்செக்ஸ் கடந்து வந்த பாதை என்ன? இதற்கு முன் எட்டிய மைல்கற்கள் என்ன? மும்பை பங்குச் சந்தை 146 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1875ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி உருவாக்கப்பட்டது.

சென்செக்ஸ் முதல்முறையாக 1990ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி 1000 புள்ளிகளை தாண்டியது. இது சென்செக்ஸுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. அதன்பின் சுமார் 31 ஆண்டு காலத்துக்குப் பின் சென்செக்ஸ் தற்போது 60000 புள்ளிகளை தாண்டியுள்ளது.

Bank Holidays: இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது!
சென்செக்ஸ் 50000 புள்ளிகளில் இருந்து 60000 புள்ளிகளை தாண்டுவதற்கு 256 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால், கடந்த 42 நாட்களிலேயே சென்செக்ஸ் 5000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1990ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி சென்செக்ஸ் 1000 புள்ளிகளை தாண்டியபின் 2006ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி 10,000 புள்ளிகளை தாண்டியது. பின்னர் 2007 அக்டோபர் 29ஆம் தேதி 20000 புள்ளிகளை தாண்டியது. 2015ஆம் தேதி மார்ச் 4ஆம் தேதி 30000 புள்ளிகளை தாண்டியது.

2019 மே 23ஆம் தேதி சென்செக்ஸ் 40000 புள்ளிகளை தாண்டியது. பின்னர் 2021 ஜனவரி 21ஆம் தேதி 50000 புள்ளிகளை தாண்டியது. இந்நிலையில், நேற்று 60000 புள்ளிகளை தாண்டியுள்ளது. இதில், 2021ஆம் ஆண்டில் மட்டும் 50000, 60000 ஆகிய இரண்டு மைல்கற்களையும் சென்செக்ஸ் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *