சுத்தமான தங்கத்தை கண்டுபிடிப்பது எப்படி? சூப்பர் டிப்ஸ்!

by -33 views

ஹைலைட்ஸ்:

  • தூய தங்கத்தை எப்படி சரிபார்ப்பது?
  • வாடிக்கையாளர்களுக்கு சில டிப்ஸ்

இன்று (நவம்பர் 2) தந்தேரஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. வட மாநிலங்கள் மற்றும் மேற்கு மாநிலங்களில் தந்தேரஸ் பண்டிகை பரவலாக கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டம் வரும் என்பது பரவலான நம்பிக்கை. எனவே இந்நாளில் பலரும் தங்கம், வெள்ளி மற்றும் பாத்திரங்களை வாங்கி பண்டிகையை கொண்டாடுவார்கள்.

தங்கம் வாங்கும்போது சுத்தமான தங்கத்தை வாங்குவது அல்லது தங்கத்தின் தூய்மையை (purity) சரிபார்ப்பது எப்படி?

* BIS ஹால்மார்க் முத்திரை கொண்ட நகைகளை வாங்கலாம். தங்கத்தின் தூய்மை சரிபார்க்கப்பட்டது என்பதற்கு BIS ஹால்மார்க் முத்திரை ஒரு சான்று.

* அழகுசாதன பொருட்கள் அல்லது வியர்வை பட்டால் தங்கத்தின் நிறம் மாறக்கூடாது.

* தங்கம் எவ்வளவுக்கு எவ்வளவு தூய்மையாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மென்மையாக இருக்கும். உதாரணமாக, 18 கேரட் தங்கத்தை காட்டிலும் 22 கேரட் தங்கம் மென்மையாக இருக்கும்.

* நீங்கள் வாங்கும் தங்கம் தண்ணீரில் மிதந்தால், அது தூய்மையில்லாத தங்கம்.

* தூய்மையான தங்கம் துருப்பிடிக்காது.

* தங்க நகை உங்கள் தோலில் எரிச்சல் அல்லது அலர்ஜி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தினால் அது தூய்மையில்லாத தங்கம்.

Term Insurance வாங்கும்போது செய்யக்கூடாத தவறுகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *