சிலிண்டர் மானியம் ரத்து… மத்திய அரசின் ரகசிய திட்டம்?

by -28 views

சென்ற ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு வந்த பிறகு அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சமையல் சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்படுவதாகத் தகவல் வெளியானது. ஆனால் அரசு தரப்பிலிருந்து அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. நிறையப் பேருக்கு சமையல் சிலிண்டர் மானியம் வருகிறதா, இல்லையா என்ற சந்தேகம் கூட இருக்கும். சமையல் சிலிண்டர் மானியம் குறித்து ஆன்லைன் மூலமாக சரிபார்க்கலாம்.

உண்மையில் சமையல் சிலிண்டர் மானியம் உயர்த்தப்படவில்லை. ஆனால், விலையேற்றம் போன்ற காரணங்களால் கிட்டத்தட்ட மானியம் ரத்துசெய்யப்பட்டது போன்ற சூழலே இருக்கிறது. 2020-21 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் பொதுமக்களுக்கு சிலிண்டர் மானியமாக அரசு தரப்பிலிருந்து மொத்தம் ரூ.16,461 கோடி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 2021-22 நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் ரூ.1,233 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மானியத் தொகை எந்த அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க முடிகிறது.

சிலிண்டருக்கு எவ்வளவு மானியம் வருது? உடனே செக் பண்ணுங்க!
மானிய விலையில் கிடைக்கும் சிலிண்டரின் விலையும், மானியமில்லா சிலிண்டரின் விலையும் கிட்டத்தட்ட சமமாக இருந்ததால் மானிய உதவி வந்ததே தெரியவில்லை. பலர் தங்களுக்கு மானிய உதவி நிறுத்தப்பட்டுவிட்டதாகவே நினைத்திருப்பார்கள். சிலிண்டர் விலையைப் பொறுத்தவரையில், 2020 டிசம்பர் 1ஆம் தேதி முதல் 2021 மார்ச் 31ஆம் தேதி வரையில் சிலிண்டர் விலை 225 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது. 2020 பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.858 ஆக இருந்தது. 2020 மே மாதத்தில் இதன் விலை ரூ.582 ஆகக் குறைந்தது. பின்னர் ஜூன் மாதத்தில் ரூ.594 ஆக உயர்த்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *