சிலிண்டர் மானியம் இன்னும் வரலயா? உடனே இதை பண்ணுங்க!

by -49 views
சிலிண்டர் மானியம் இன்னும் வரலயா? உடனே இதை பண்ணுங்க!
சிலிண்டர் மானியம் இன்னும் வரலயா? உடனே இதை பண்ணுங்க!

பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கு மத்தியில் சமையல் சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்படுவதாக அதிர்ச்சி செய்தி தீயாகப் பரவியது. அரசு தரப்பிலிருந்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், பயனாளிகளுக்கு சிலிண்டர் மானியம் வராததால் இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. கொரோனா பிரச்சினையைத் தொடர்ந்து மத்திய அரசுக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மானியத் தொகையை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. சென்ற ஆண்டின் மே மாதம் முதலே மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு வரவில்லை என்ற புகார் உள்ளது.

இந்நிலையில், சமையல் சிலிண்டருக்கான மானியத் தொகை மீண்டும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதாக அரசு தரப்பிலிருந்து தகவல் வெளியாகியது. இது பயனாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நிறையப் பேர் தங்களது வங்கிக் கணக்கில் பணம் வந்துவிட்டதா என்று பார்க்கத் தொடங்கிவிட்டனர். சிலிண்டர் மானியம் வந்ததா இல்லையா என்று தெரிந்துகொள்வதற்கு ஆன்லைன் மூலமாகவே நீங்கள் பார்க்கலாம்.

சிலிண்டருக்கு மீண்டும் மானியம்! பொதுமக்கள் ஹேப்பி!
http://mylpg.in/ என்ற வெப்சைட்டில் சென்று உங்களுடைய LPG ஐடியைப் பதிவிட்டு, நீங்கள் சிலிண்டர் வாங்கும் கம்பெனி உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். சிலிண்டருக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரையும் கொடுக்க வேண்டும். மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி எண்ணைப் பதிவிட்டு, கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட்டு ‘proceed’ கொடுக்க வேண்டும். அடுத்ததாக வரும் புதிய பக்கத்தில் உங்களது ஈமெயில் ஐடி கொடுத்து பாஸ்வர்டு உருவாக்க வேண்டும். இது முடிந்ததும் உங்களது ஈமெயில் ஐடிக்கு ஆக்டிவேசன் லிங்க் அனுப்பப்படும். அதை கிளின் செய்தால் உங்களது கணக்கு ஆக்டிவேட் ஆகிவிடும்.

மீண்டும் http://mylpg.in/ வெப்சைட்டில் லாகின் செய்து View Cylinder Booking History/subsidy transferred’ என்பதை கிளிக் செய்தால் உங்களது மானியம் தொடர்பான விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.

ஒருவேளை உங்களுக்கு சிலிண்டர் மானியம் வராமல் இருந்தாலோ வேறு ஏதேனும் புகார்கள் இருந்தாலோ 18002333555 என்ற டோல் பிரீ நம்பரை அழைத்து புகார் கொடுக்கலாம். சிலிண்டர் விநியோகம் செய்யும் ஏஜென்சிக்கு நேரில் சென்றும் நீங்கள் இதுகுறித்து விசாரிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *