சிலிண்டர் மானியம் இனி கிடைக்காது? பொதுமக்கள் ஷாக்!

by -18 views

விறகு அடுப்பில் வெந்த காலம் மாறி, சுகாதாரமான சமையல் எரிவாயு அனைவரது வீட்டிலும் வந்துவிட்டது. சமையல் சிலிண்டர்கள் பொதுமக்களுக்கு எளிதாகக் கிடைப்பதற்காக மத்திய அரசு தரப்பிலிருந்து பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிலிண்டர் விலை உயர்வு சுமையைக் குறைக்க பொதுமக்களுக்கு மானிய உதவியை அரசு வழங்கி வருகிறது. சிலிண்டருக்கு இவ்வளவு என்று கொடுக்கப்படும் இந்த மானிய உதவி மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது.

தற்போதைய சூழலில், இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலையுடன் சமையல் சிலிண்டர் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டு வருகிறது. இது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. இதுமட்டுமல்லாமல், சிலிண்டருக்கான மானியமும் உரிய முறையில் கிடைப்பதில்லை என்ற புகார்கள் உள்ளன. ஆண்டு வருமானம் 10 லட்ச ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் இருந்தால்தான் மானிய உதவி கிடைக்கும். சிலிண்டர் இணைப்புடன் ஆதாரும் வங்கிக் கணக்கும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

சிலிண்டருக்கு எவ்வளவு மானியம் வருது? உடனே செக் பண்ணுங்க!
எல்லாம் சரியாக இருந்தாலும் மானிய உதவி சரியாகக் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. பலருக்கு மானிய உதவி வங்கிக் கணக்குக்கு வருகிறதா இல்லையா என்பதே தெரிவதில்லை. உண்மையில் சமையல் சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்திவிட்டதா என்ற சந்தேகமும் பலருக்கு உள்ளது. ஏனெனில், சென்ற ஆண்டின் மே மாதம் முதலே பலருக்கு சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லை. சிலிண்டருக்கான மானிய உதவியைப் படிப்படியாக நிறுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுகுறித்து அரசு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும் ஒரே அடியாக மானிய உதவியை நிறுத்தாமல் ரகசியமாக மானிய உதவியை நிறுத்தும் திட்டத்தில் மத்திய அரசு இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, சமையல் சிலிண்டர் விலையும் விரைவில் 1000 ரூபாயைத் தாண்டும் என்று மதிப்பீடுகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *