சர்வதேச விலை நிலவரத்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னையில் மீண்டும் 100 ரூபாயை நெருங்குவதால் வாகன ஓட்டிகள் அச்சம்

by -23 views

சென்னை: கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் விலை மீண்டும் சென்னையில் 100 ரூபாயை நெருங்கி வருகிறது. பெட்ரோல் மீதான வாட் வரி லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படுவதாக திமுக அரசு ஆகஸ்ட் 13-ம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது. இதன் காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய்க்கு கீழ் வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

நடப்பு வாரத்திலேயே 3-வது முறையாக விலை அதிகரித்திருப்பதால் வாகன ஓட்டிகள், சரக்கு போக்குவரத்து துறையினர் அவத்திக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து 99 ரூபாய் 58 காசுகளுக்கு விற்பனையாகிறது. அதேபோல டீசல் 29 காசுகள் அதிகரித்து 94 ரூபாய் 74 காசுகளுக்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பெட்ரோலிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அந்த துறையினர் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *