சமையல் எரிவாயு சிலிண்டர் மீண்டும் விலை உயர்வு; ஒரே ஆண்டில் சிலிண்டர் விலை ரூ.300 அதிகரிப்பு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

by -31 views

சென்னை: சென்னை வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 15 உயர்ந்து ரூ. 915 க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய வற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றுகின்றனர். காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு 2 முறை மாற்றப் படுகிறது. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான (அக்டோபர்) காஸ் சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.

அதில், நாடு முழுவதும் 14.2 கிலோ வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.15 உயர்த்தப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் சிலிண்டர் விலை ரூ.915க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சிலிண்டரின் விலை உயர்வால் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 300 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *