சபரிமலை சீசனையொட்டி ஈரோட்டில் வேட்டி, துண்டு விற்பனை துவக்கம்

by -51 views
சபரிமலை சீசனையொட்டி ஈரோட்டில் வேட்டி, துண்டு விற்பனை துவக்கம்
சபரிமலை சீசனையொட்டி ஈரோட்டில் வேட்டி, துண்டு விற்பனை துவக்கம்

ஈரோடு: சபரிமலை சீசன் நாளை தொடங்க உள்ளதை அடுத்து ஈரோட்டில் ஐயப்ப பக்தர்கள் அணியும் வேட்டி, சட்டை, துண்டு, பாசிமாலை ஆகியவற்றின் விற்பனை தொடங்கி உள்ளது. கார்த்திகை மாதம் நாளை தொடங்க உள்ளதை அடுத்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவது வழக்கம். இந்நிலையில் ஈரோட்டில் ஜவுளி கடைகள் மற்றும் தற்காலிக கடைகளில் ஐயப்ப பக்தர்கள் அணியும் வேட்டி, சட்டை, துண்டு, இருமுடிபை, மாலை ஆகியவை விற்பனை தொடங்கி உள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாசி மாலை வியாபாரி சுப்பிரமணியன் கூறுகையில், ‘நரிக்குறவர் சமூகத்தை நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக பாசி மாலைகள் வியாபாரம் செய்து வருகின்றோம். கார்த்திகை மாதம் தொடங்குவதற்கு 3 வாரங்களுக்கு முன்பு இருந்தே பாசிமாலைகள் வியாபாரம் தொடங்கிவிடும்.

ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *