கோடிக் கணக்கில் கடன் வாங்கும் மோடி அரசு! காரணம் என்ன?

by -98 views

சென்ற ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினை தீவிரமடைந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அரசின் வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்தது. இதனால் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் ரூ.5.03 லட்சம் கோடியை மத்திய அரசு கடனாக வாங்குகிறது. இதன் மூலம் கொரோனாவால் நலிந்துபோன இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் கடன் பத்திரங்கள் மூலமாக ரூ.7.02 லட்சம் கோடி கடன் வாங்கியது. இந்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நடப்பு ஆண்டில் ரூ.12.05 லட்சம் கோடி மட்டுமே கடன் வாங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் முதல் ஆறு மாதங்களில் ரூ.7.02 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுவிட்டது. இது மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில் 60 சதவீதமாகும். இந்த ஆறு மாதங்களில் ரூ.7.24 லட்சம் கோடி கடன் வாங்க முடிவுசெய்யப்பட்டிருந்தது.

பென்சன் வரம்பு உயர்வு.. அரசு முக்கிய அறிவிப்பு!
முதல் பாதியில் 7.02 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுவிட்டதால், இரண்டாவது பாதியில் மீதமுள்ள ரூ.5.03 லட்சம் கோடியை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இரண்டாம் பாதிக்கான கடன் மதிப்பீட்டில் ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியும் அடங்கும். முதல் பாதியில், ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கு எதிராக வழங்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ரூ.75,000 கோடியை வழங்கியிருந்தது.

ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகை ரூ.1.58 லட்சம் கோடி இருக்கும் நிலையில், மீதமுள்ள ரூ.83,000 கோடியானது அக்டோபர் 1 முதல் இரண்டாம் பாதியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படும். எனவே இதையெல்லாம் பொறுத்து அரசின் கடன் சுமை இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *