கோடிக்கணக்கில் குவியும் முதலீட்டாளர்கள்.. கொண்டாட்டத்தில் மும்பை பங்குச் சந்தை!

by -26 views

ஹைலைட்ஸ்:

  • 8 கோடி முதலீட்டாளர்களை தாண்டிய மும்பை பங்கு சந்தை
  • ஒரே ஆண்டில் பயங்கர வளர்ச்சி

மும்பை பங்குச் சந்தை (BSE) இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தையாகும். 1875ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தொடங்கப்பட்ட மும்பை பங்குச் சந்தை 146 ஆண்டுகள் பழைமையும், வரலாறும் கொண்டதாகும்.

இந்நிலையில், மும்பைப் பங்குச் சந்தையில் பதிவு செய்துகொண்ட பயனர்களின் எண்ணிக்கை 8 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த தகவல் என்னவெனில், பயனர்களின் எண்ணிக்கை வெறும் 107 நாட்களில் 7 கோடியில் இருந்து 8 கோடியாக உயர்ந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் UCC முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 8 கோடியை தொட்டுள்ளதாக மும்பை பங்குச் சந்தையின் தலைமை செயலதிகாரி ஆசிஷ் சவுஹான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மும்பை பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7 கோடியை தொட்டது குறிப்பிடத்தக்கது.

வீட்டுக் கடன் வட்டி குறைப்பு.. HDFC சூப்பர் அறிவிப்பு!
கொரோனா காலகட்டத்தில் வேலைவாய்ப்புகள் இழப்பு, தொழில் பாதிப்பு என பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. அதே சமயம் ஏராளமான ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என ஏற்கெனவே சில தகவல்கள் வெளியாகின.

இதை உறுதிப்படுத்தும் வகையில், மும்பை பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 8 கோடியை தொட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதிலும், 20 முதல் 40 வயதுக்குட்பட்ட இளம் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *