கேஸ் சிலிண்டருக்கு தங்கம் இலவசம்.. அடடே ஆஃபர்!

by -103 views

ஹைலைட்ஸ்:

  • கேஸ் சிலிண்டருக்கு 24 கேரட் தங்கம்
  • இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிதிங்க

கேஸ் சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இம்மாதத்தின் தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை 15 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், கேஸ் சிலிண்டர் வாங்குவோருக்கு 24 கேரட் தங்கம் வழங்கும் அட்டகாசமான திட்டம் அறிமுகமாகியுள்ளது.

பண்டிகைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வருகின்றன. நவராத்திரி பண்டிகைக் கொண்டாட்டம் தொடங்கியுள்ள சூழலில், பேடிஎம் (Paytm) நிறுவனம் ‘நவராத்திரி கோல்டு’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், கேஸ் சிலிண்டர் வாங்கினால் 24 கேரட் தூய தங்கம் பெறுவதற்கு ஒரு சூப்பர் வாய்ப்பு. தங்கம் வெல்ல விரும்புவோர் பேடிஎம் ஆப் மூலம் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்தால் போதும். அக்டோபர் 16ஆம் தேதிக்குள் புக்கிங் செய்ய வேண்டும்.

ரூ. 10,000 முதலீடு.. 16 லட்சம் வருமானம்.. போஸ்ட் ஆபீஸ் திட்டம்!
ஒவ்வொரு தினமும் 5 வெற்றியாளர்களின் பெயர் பட்டியலை பேடிஎம் வெளியிடும். அவர்கள் 10,001 ரூபாய் மதிப்புள்ள 24 கேரட் தூய தங்கம் வெல்ல வாய்ப்பு கிடைக்கும். இதுமட்டுமல்லாமல், போட்டியாளர்கள் அனைவருக்கும் 100 ரூபாய் பரிசாக கிடைக்கும்.

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு இச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிலிண்டர் புக்கிங் செய்வோருக்கு கேஷ்பேக் சலுகைகள் மட்டுமல்லாமல் பரிசுகளும், தங்கமும் வழங்கப்படுவதாக பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *