கேப் விடாமல் வெளுத்து வாங்கும் விலை!

by -31 views

தங்கம் வாங்க நினைப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று யோசிக்கும் அளவுக்கு சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இன்று காலையில் விலையேற்றம் இருந்தது. இந்நிலையில் மேலும் அதிர்ச்சி தரும் விதமாக, தற்போது மாலை நேரத்திலும் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று (நவம்பர் 9) காலையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,527 ஆக இருந்தது. மாலையில் அது 4,533 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, காலையில் 36,216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் மாலையில் 48 ரூபாய் உயர்ந்து 36,264 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வங்கியில் பணம் எடுக்கத் தடை… வாடிக்கையாளர்கள் ஷாக்!

தூய தங்கத்தின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இன்று காலை 4,891 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் மாலையில் 4,897 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, காலையில் 39,128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் மாலையில் 48 ரூபாய் உயர்ந்து 39,176 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று காலை ரூ.69.10 ஆக இருந்தது. மாலையில் அது ரூ.69.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி 69,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *