கூட்டுறவு சங்கங்களுக்கு எச்சரிக்கை… மக்களே உஷார்!

by -50 views
கூட்டுறவு சங்கங்களுக்கு எச்சரிக்கை… மக்களே உஷார்!
கூட்டுறவு சங்கங்களுக்கு எச்சரிக்கை… மக்களே உஷார்!

வங்கி மோசடி என்பது இந்தியாவில் புதிதல்ல. ஆனால் பல்வேறு வகைகளில் பல்வேறு விதமாக தினந்தினம் மோசடிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்த விஷயத்தில் வங்கிகளும் ரிசர்வ் வங்கியும் பொதுமக்களுக்கு எவ்வளவுதான் விழிப்புணர்வு வழங்கினாலும் மோசடிகள் குறைந்தபாடில்லை. வாடிக்கையாளர்களுக்கு மூன்றாம் தரப்பிலிருந்து பிரச்சினைகள் வருவதுபோக, இப்போது வங்கிகள் வாயிலாகவே வரும் பிரச்சினைகள் அதிகரித்துவிட்டன.

ஆனால் இது வேறுமாதிரி… வங்கிகள் என்ற பெயரில் கூட்டுறவு சங்கங்கள் மோசடி செய்வதாகப் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த கூட்டுறவு சங்கங்களில் பணத்தை டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை இழந்துவிடுகின்றனர். உண்மையில் அந்த கூட்டுறவு சங்கம் ரிசர்வ் வங்கியின் ஒப்புதலோடுதான் செயல்படுகிறதா என்று வாடிக்கையாளர்களுக்குத் தெரிவதில்லை.

இதுபோல சில கூட்டுறவு சங்கங்கள் தங்களை வங்கி என அறிவித்துக்கொண்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து மத்திய ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இனி கூட்டுறவு சங்கங்கள் எதுவும் ‘Bank’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முன்னரே சட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள் இதைச் செய்யக் கூடாது! பணத்துக்கு ஆபத்து!
வங்கி விதிமுறைச் சட்டம் 1949-இன் படி, 2020 செப்டம்பர் 29ஆம் தேதி முதல் கூட்டுறவு சங்கங்கள் எதுவும் bank என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆனால் சில கூட்டுறவு சங்கங்கள் அதை மீறி வாடிக்கையாளர்களின் பணத்தை வாங்குவதாகவும், கடன் வழங்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, இதுபோன்ற கூட்டுறவு சங்கங்களில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் பணத்துக்கு காப்பீடு கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் bank, banker, banking போன்ற பெயர்களைப் பயன்படுத்தவே கூடாது என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *