கூகுளில் இதைத் தேடாதீங்க… எஸ்பிஐ எச்சரிக்கை!

by -54 views
கூகுளில் இதைத் தேடாதீங்க… எஸ்பிஐ எச்சரிக்கை!
கூகுளில் இதைத் தேடாதீங்க… எஸ்பிஐ எச்சரிக்கை!

நம்மில் பலர் எந்தவொரு விஷயத்துக்கும் தேவையான தகவல்களை கூகுள் தளத்தில்தான் தேடுவோம். குறிப்பாக PIN code நம்பர், வாடிக்கையாளர் சேவை எண், IFSC code போன்ற பல்வேறு விஷயங்களை கூகுளில் தேடுவோம். ஆனால் இதில் பெரிய ஆபத்து இருப்பது நமக்குத் தெரியாது. நாம் தேடும் விவரங்கள் கூகுளில் வழங்கப்படுவது பெரும்பாலும் சரியானவையாகவே இருக்கும். ஆனால் சில நேரங்களில் தவறான தகவல்கள் கிடைக்கலாம். இது நமக்கு பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தலாம்.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்த விஷயத்தில் தனது வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்துள்ளது. அதாவது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் கஸ்டமர் கேர் நம்பர் என்ன என்று தெரிந்துகொள்ள கூகுளில் தேட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அதற்குப் பதிலாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் சென்று அதிலிருந்து கஸ்டமர் கேர் நம்பரை எடுத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளது.

குட் நியூஸ் – கட்டணம் கிடையாது! SBI அறிவிப்பு!
சமீப காலங்களில் ஆன்லைன் மோசடிகள் நிறைய நடைபெறுகின்றன. வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், ஓடிபி போன்றவற்றை வாங்கி, அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருடி விடுகின்றனர். எனவே வங்கிக் கணக்கு விஷயத்தில் வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை செய்துள்ளது. கூகுளில் கஸ்டமர் கேர் நம்பரைத் தேட வேண்டாம் என்று நேரடியாகக் கூறாமல், வங்கியின் வெப்சைட்டை மட்டும் பாருங்கள் என்று ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *