குழந்தைகளுக்கும் பான் கார்டு வாங்கலாம்.. எப்படின்னு தெரியுமா?

by -54 views
குழந்தைகளுக்கும் பான் கார்டு வாங்கலாம்.. எப்படின்னு தெரியுமா?
குழந்தைகளுக்கும் பான் கார்டு வாங்கலாம்.. எப்படின்னு தெரியுமா?

ஹைலைட்ஸ்:

  • 18 வயதுக்கு முன்பே ஆதார் கார்டு
  • எப்படி விண்ணப்பிப்பது?

பணப் பரிவர்த்தனைகள், வருமான வரி செலுத்துதல் போன்ற பல்வேறு பணிகளுக்கு பான் கார்டு அத்தியாவசியமான ஆவணமாக திகழ்கிறது. வங்கி தொடர்பான பணிகள், முதலீடு போன்றவற்றுக்கும் பான் கார்டு மிக முக்கியமானதாக இருக்கிறது.

வழக்கமாக ஒரு நபர் 18 வயதைத் தொட்ட பிறகே பான் கார்டு பெற முடியும். எனினும், 18 வயதுக்கு முன்பாகவே குழந்தைகளும், சிறுவர்களும் பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

18 வயதுக்குட்பட்ட சிறுவருக்கு பான் கார்டு பெற விண்ணப்பிக்க வேண்டுமெனில், அந்த சிறுவர் விண்ணப்பிக்க முடியாது; மாறாக அவரது பெற்றோர்தான் பிள்ளையின் சார்பில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் பான் கார்டு விண்ணப்பிக்க NSDL இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. இனி எக்ஸ்ட்ரா பணம் கட்டணும்!
பான் கார்டு விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட சிறுவரின் தனிநபர் விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். சிறுவரின் வயதுக்கான ஆதாரம் உள்ளிட்ட இதர ஆவணங்கள் மற்றும் பெற்றோரின் படங்களையும் சேர்த்து அப்லோடு செய்யலாம்.

இச்சமயத்தில் பெற்றோரின் கையொப்பம் மட்டுமே அப்லோடு செய்ய வேண்டும். 107 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். உங்களிடம் ஒரு Receipt number கொடுக்கப்படும். வெரிஃபிகேஷன் முடிந்து 15 நாட்களில் சிறுவருக்கு பான் கார்டு அனுப்பப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *