குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்.. நிறைய பணம் சேமிக்கலாம்.. எப்படி?

by -31 views

ஹைலைட்ஸ்:

  • குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன்
  • மறைமுக கட்டணங்கள் இல்லை
  • பிராசஸிங் கட்டணமும் இல்லை

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ பண்டிகைக்காலத்தை முன்னிட்டு சூப்பர் சலுகைகளை அண்மையில் அறிவித்தது. இதன்படி, வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.70% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்தது.

இதுமட்டுமல்லாமல், வீட்டுக் கடன்களுக்கான பிராசஸிங் கட்டணம் (Processing fee) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல், எந்தவொரு மறைமுக கட்டணங்கள் மற்றும் நிர்வாகக் கட்டணங்கள் கிடையாது என எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வீட்டுக் கடன்களுக்கு 6.70% என்பது மார்க்கெட்டில் மிகக் குறைந்த வட்டியாகும். இதுபோக பிராசஸிங் கட்டணம் இல்லை, மறைமுக கட்டணங்களும் இல்லை என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. எனவே, வீட்டுக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்கள் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

கம்மி விலையில் வீடு, சொத்து அள்ளிட்டு போங்க.. சூப்பர் வாய்ப்பு!
எஸ்பிஐ வீட்டுக் கடன் பெற எப்படி விண்ணப்பிப்பது?

* முதலில் இந்த Linkஐ கிளிக் செய்யவும்

* கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை பூர்த்தி செய்து கூடுதல் தகவல்களை பெறலாம்.

இதுபோக எஸ்பிஐ யோனோ ஆப்பிலும் (SBI YONO App) விண்ணப்பிக்கலாம்.

* யோனோ ஆப் இன்ஸ்டால் செய்துகொள்ளவும்

* Loans பிரிவை கிளிக் செய்யவும்

* அதில் Home Loan பிரிவை கிளிக் செய்யவும்

* பிறந்த தேதி, வருமானம், மற்ற கடன்கள் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *