கீழ் நோக்கிச் செல்லும் தங்கம் விலை!

by -30 views

தங்கம் வாங்க நினைப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று யோசிக்கும் அளவுக்கு சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் மகிழ்ச்சி தரும் விதமாக, கடந்த மூன்று நாட்களில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மாலை நேரத்திலும் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (செப்டம்பர் 30) காலையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,340 ஆக இருந்தது. மாலையில் அது மேலும் குறைந்து 4,336 ரூபாய்க்கு வந்துள்ளது. அதேபோல, காலையில் 34,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் மாலையில் 32 ரூபாய் குறைந்து 34,688 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Gold rate: இன்னைக்கே நகை வாங்குனா நல்லது!

தூய தங்கத்தின் விலையும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 4,704 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் மாலையில் 4,700 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, காலையில் 37,632 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் மாலையில் 32 ரூபாய் குறைந்து 37,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று காலை ரூ.63 ஆக இருந்தது. மாலையிலும் அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 63,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *