கிரெடிட் கார்டு இருக்கா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது!

by -140 views

நம்மில் பலர் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வருகிறோம். கிரெடிட் கார்டு என்பது வங்கியில் கடன் பெறுவதற்கான ஒரு அட்டையாகும். அதில் கடன் வரம்பும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். கடன் வரம்பைத் தாண்டி கிரெடிட் கார்டில் பணம் எடுக்கவோ, பயன்படுத்தவோ முடியாது. கிரெடிட் கார்டில் கார்டு நம்பர், கார்டு வைத்திருப்பவரின் பெயர், வங்கியின் பெயர் போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும். அதில் நீங்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் எக்ஸ்பைரி டேட். கிரெடிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் செலுத்தும்போது அந்த எக்ஸ்பைரி டேட்டையும் நீங்கள் பதிவிட வேண்டியிருக்கும்.

கிரெடிட் கார்டில் உள்ள எக்ஸ்பைரி டேட் முடிந்துவிட்டால் என்ன ஆகும்? நிறையப் பேர் அந்த கார்டு முற்றிலும் குளோஸ் ஆகிவிடும். புதிய கணக்கில் புதிய கார்டுதான் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். உண்மையில் கிரெடிட் கார்டில் உள்ள எக்ஸ்பைரி டேட் முடியும்போது வேறொரு கார்டு வாங்கிக் கொள்ளலாம். அதே கணக்கிலேயே அதே நம்பரிலேயே வேறொரு கிரெடிட் கார்டு கிடைக்கும். சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இப்போதெல்லாம் நிறைய வங்கிகள் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வசதியைக் கொண்டுவந்துவிட்டன.

இனி எல்லாமே கிரெடிட் கார்டுதான்!
புதிய கார்டுக்கு விண்ணப்பித்தவுடன் அந்த கார்டு சம்பந்தப்பட்ட நபரின் முகவரிக்கே அனுப்பப்பட்டுவிடும். ஒருவேளை கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்த முகவரி மாறியிருந்தால் அதுகுறித்து வங்கியிடம் தெரிவித்து புதிய முகவரியை அப்டேட் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *