கிடுகிடுவென சரிந்த IRCTC ஷேர்.. காரணம் என்ன?

by -34 views

ஹைலைட்ஸ்:

  • 20 விழுக்காடு சரிந்த ஐஆர்சிடிசி பங்கு
  • திடீர் சரிவுக்கு காரணம் என்ன?

இன்று பங்குச் சந்தை தொடங்கிய முதல் 30 நிமிடங்களிலேயே ஐஆர்சிடிசி (IRCTC) பங்கு விலை 20 விழுக்காடு சரிந்தது. இந்த திடீர் சரிவுக்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

ஐஆர்சிடிசி தளத்தில் ரயில் டிக்கெட்டுகள் புக்கிங் சேவைகள் வழங்கப்படுகிறது. ரயில் டிக்கெட் புக்கிங்கில் வாடிக்கையாளர்களிடம் இருந்து convenience கட்டணத்தை ஐஆர்சிடிசி வசூலிக்கிறது. இந்நிலையில், convenience கட்டண வசூலில் கிடைக்கும் வருவாயில் 50% அரசிடம் வழங்கும்படி ரயில்வே அமைச்சகம் கேட்டது.

நவம்பர் 1ஆம் தேதி முதல் வசூலிக்கப்படும் convenience கட்டணத்தில் 50% அரசிடம் வழங்கும்படி ஐஆர்சிடிசிக்கு ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியது. ஐஆர்சிடிசி நிறுவனத்தின் வருவாயில் டிக்கெட் வசூல் வருவாய்க்கு 27% பங்கு இருக்கிறது. இதில் பெரும்பங்கை அரசு கேட்பது பங்குதாரர்களின் கவனத்தை ஈர்த்தது.

வரிசைகட்டும் IPOக்கள்.. மொத்த லிஸ்ட் இதோ!
இதைத்தொடர்ந்து, இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியதும் ஐஆர்சிடிசி பங்கு 20% சரிந்தது. பங்கு விலை கடுமையாக சரிந்ததை தொடந்து ரயில்வே அமைச்சகம் தனது முடிவை மாற்றிக்கொண்டது. வருவாயில் 50% பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டதை ரயில்வே அமைச்சகம் வாபஸ் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *