கார் வாங்க போறிங்களா? உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!

by -25 views

ஹைலைட்ஸ்:

  • கம்மி வட்டிக்கு கார் கடன்
  • எஸ்பிஐ வங்கியின் சூப்பர் அறிவிப்பு

பண்டிகைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் வழக்கம் போல ஏராளமானோர் கார் வாங்கத் திட்டமிட்டிருப்பார்கள். இதற்கேற்ப வங்கிகளும், கார் நிறுவனங்களும் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

இந்த வரிசையில், இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி கார் கடன்களுக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. பண்டிகை சீசனை முன்னிட்டு குறைந்த வட்டிக்கு கார் கடன்களை வழங்குவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

கார் கடன்களுக்கு 7.25% முதல் வட்டி விதிப்பதாக எஸ்பிஐ வங்கி ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அனைத்து நிறுவனங்களை சேர்ந்த புதிய கார்களுக்கும் எஸ்பிஐ வங்கி கடன் வழங்குகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மிகாத பழைய கார்களுக்கும் (second hand car) கடன் வழங்குகிறது.

ஃபிக்சட் டெபாசிட்: அதிக வட்டி தரும் வங்கிகள்!
கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலத்துக்கு ஏற்ப EMI தொகை கணக்கிடப்படும். குறுகிய காலத்திலேயே கடனை திருப்பிச் செலுத்தி முடிக்க திட்டமிட்டால் EMI தொகையும் அதிகரிக்கும். one time சாலை வாரி, பதிவுக் கட்டணம், இன்சூரன்ஸ் பிரீமியம் ஆகியவற்றுக்கும் எஸ்பிஐ பைனான்ஸ் செய்கிறது.

எஸ்பிஐ கார் கடனுக்கு எப்படி விண்ணப்பிப்பது? இதற்காக வங்கிக் கிளைக்கு அலையத் தேவையில்லை. ஈசியாக உங்கள் மொபைலில் எஸ்பிஐ வங்கியின் YONO ஆப் இன்ஸ்டால் செய்து அதில் கார் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *