கார் வாங்க சூப்பர் சான்ஸ்… அட்டகாசமான சலுகை வழங்கும் SBI!

by -46 views

கொரோனா பிரச்சினை வந்த பிறகு நிறையப் பேருக்குக் கடுமையான நிதி நெருக்கடி நிலவுகிறது. அதோடு பெட்ரோல் டீசல் விலையேற்றம் கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக உள்ளது. இதுபோன்ற சூழலில் புதிதாக கார் வாங்குவது என்பது சற்று கடினமான ஒன்றுதான். ஆனால் ஏதேனும் சிறப்புச் சலுகைகளின் கீழ் கார் வாங்குவதற்கு ஏதேனும் வாய்ப்பு இருந்தால் அதை யாரும் தவறவிட மாட்டார்கள்.

கார் வாங்குவதற்கு பல்வேறு வங்கிகள் கடன் வழங்குகின்றன. ஆனால் வட்டி விகிதம் குறைவாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வங்கியைத் தேர்ந்தெடுத்து கடன் வாங்கலாம். வட்டி மட்டும் போதாது. செயல்பாட்டுக் கட்டணம் குறைவு, ஈஎம்ஐ வசதி போன்றவற்றையும் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட சலுகையை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வாங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது அறிவித்துள்ளது.

இந்தச் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் 7.25 சதவீத வட்டியில் கார் கடன் வாங்கலாம். புதிய கார் வாங்குபவர்களுக்கும், 5 ஆண்டு வரை பழமையான கார் வாங்குபவர்களுக்கும் இச்சலுகை கிடைக்கும். காரின் விலை 90 சதவீதம் வரையில் கடனாக வழங்கப்படும். பிரீபேமெண்ட் சார்ஜ் எதுவும் வசூலிக்கப்படாது. செயல்பாட்டுக் கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஈஎம்ஐ வசதியைப் பொறுத்தவரையில், கார் கடன் வாங்குபவர்கள் 84 ஈஎம்ஐகளில் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இந்த சிறப்புச் சலுகையின் கீழ் கார் கடன் வாங்க நினைப்பவர்கள் 7208933142 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். அல்லது 7208933145 என்ற எண்ணுக்கு CAR என SMS அனுப்பலாம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தைப் பார்வையிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *