கார் வாங்க ஆசையா? இதோ சூப்பர் வாய்ப்பு! பண்டிகைக் கால சலுகை!

by -39 views

சொந்தமாக ஒரு கார் வாங்கவேண்டும் என்ற திட்டம் இருக்கா? ஆம் என்றால் பஞ்சாப் நேஷனல் பேங்க் வழங்கும் கார் கடன் திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். பண்டிகைக் கால சிறப்புத் திட்டத்தின் கீழ் தனிநபர்களுக்கு அவர்களது சம்பளத்தில் 25 மடங்கு வரை கடன் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடன் கிடைக்கும். இந்தக் கடனை வாங்குவதற்கு ஒரு நிபந்தனையும் உள்ளது. கடன் வாங்குபவரின் மாத சம்பளம் குறைந்தது 20,000 ரூபாயாவது இருக்க வேண்டும்.


புதிய கார் மட்டுமல்லாமல் செகேண்ட் ஹேண்ட் வாகனங்கள் வாங்க நினைப்பவர்களுக்கும் இவ்வங்கி சிறப்புக் கடன் வழங்குகிறது. மூன்று வருடங்களுக்குக் குறைவான பழைய வானங்களை இத்திட்டத்தின் கீழ் வாங்கலாம். புதிய வாகனங்களுக்கு, மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், ஹோண்டா, மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் வாகனங்களை வாங்கும் போது கடன் வாங்குபவர் 10 சதவிகித பங்களிப்பு வழங்க வேண்டும். மற்ற நிறுவன வானங்களுக்கு 15 சதவீதம் ஆகும்.

நகைக் கடன் – கார் லோன் சலுகை… பணத்தை அள்ளிக் கொடுக்கும் எஸ்பிஐ!
இத்திட்டத்தின் கீழ் வாங்கிய கடனை 84 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். பழைய வாகனங்களுக்கான கடனை 60 மாதங்களில் செலுத்த வேண்டும். பண்டிகை சீசன் வந்துவிட்டதால் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வங்கிகளும் இதுபோன்ற பல்வேறு சிறப்புச் சலுகைகளைத் தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றன. எனவே அனைத்து தரப்பிலும் வட்டி, விலை, தரம் போன்ற பல்வேறு அம்சங்களை ஒப்பிட்டுப் பார்த்து இச்சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *