கார் வாங்கவா போறிங்க? குறைந்த செலவில் வாங்க சூப்பர் வாய்ப்பு!

by -38 views
கார் வாங்கவா போறிங்க? குறைந்த செலவில் வாங்க சூப்பர் வாய்ப்பு!
கார் வாங்கவா போறிங்க? குறைந்த செலவில் வாங்க சூப்பர் வாய்ப்பு!

ஹைலைட்ஸ்:

  • எஸ்பிஐ வங்கி கார் கடன் சலுகை
  • குறைந்த செலவில் கார் வாங்கலாம்

கார் வாங்குவது பற்றி உங்களுக்கு திட்டம் இருக்கா? அப்போ உங்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ சூப்பர் சலுகைகளுடன் கார் கடன் வழங்குகிறது.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி ட்விட்டரில், “கார் வாங்குவது முன்பை விட இப்போது எளிதாகியுள்ளது. பண்டிகைக்கால சலுகைகளுடன் எஸ்பிஐ கார் கடனை தேர்ந்தெடுங்கள்” என்று தெரிவித்துள்ளது.

கார் கடன்களுக்கு எஸ்பிஐ வங்கி என்னென்ன சலுகைகளை வழங்குகிறது? எஸ்பிஐ வங்கி கார் கடன்களுக்கு 7.25% வட்டி விதிக்கிறது. எல்லா புதிய கார்களுக்கும், ஐந்து ஆண்டுகளுக்கு மிகாத பழைய கார்களுக்கும் எஸ்பிஐ வங்கி கார் கடன் வழங்குகிறது.

எலெக்ட்ரிக் வாகனப் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
இதுபோக, பிராசஸிங் கட்டணம் (Processing fee) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இது, கடன் வாங்கும் நபருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஏனெனில், பிராசஸிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதால் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

இதுமட்டுமல்லாமல், சாலை வரி, பதிவுக் கட்டணம், இன்சூரன்ஸ் பிரீமியம் ஆகியவற்றுக்கும் எஸ்பிஐ வங்கி ஃபைனான்ஸ் வழங்குகிறது. இதுபோக, தனிநபர் விபத்துக் காப்பீடும் இலவசமாக வழங்கப்படுகிறது.

எஸ்பிஐ கார் கடனின் சிறப்பு அம்சங்கள்:

* 90 விழுக்காடு on-road finance

* Prepayment charges கிடையாது

* பிராசஸிங் கட்டணம் முழு ரத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *