காய்கறி விலை: கடைக்கு போங்க.. அள்ளிட்டு வாங்க!

by -25 views

ஹைலைட்ஸ்:

  • தக்காளி, கேரட் விலை வீழ்ச்சி
  • முருங்கைக்காய் விலை 40 ரூபாய்
  • விலைச் சரிவால் மக்கள் மகிழ்ச்சி

தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட முக்கியமான காய்கறிகளின் விலை சமீப காலமாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் சென்னை வாசிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். காய்கறி வாங்குவதற்காகவே தினமும் பெரிய தொகையை செலவு செய்ய வேண்டியதாக உள்ளது. எனினும் இன்று நல்ல செய்தியாக தக்காளி, கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று (அக்டோபர் 21) ஒரு கிலோ தக்காளி விலை 40 ரூபாயாகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 50 ரூபாயாக இருந்தது. அதேபோல, வெங்காயம் விலை 40 ரூபாயிலிருந்து 35 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 40 ரூபாய்க்கும், பீட்ரூட் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கேரட் விலை 40 ரூபாயாகக் குறைந்துள்ளது.

Gold rate: என்னமா நீங்க இப்படி பண்றீங்களேமா! மீண்டும் விலை உயர்வு!

காய்கறி விலைப் பட்டியல்!

தக்காளி – ரூ.40
வெங்காயம் – ரூ.35
அவரைக்காய் – ரூ.45
பீன்ஸ் – 50
பீட்ரூட் – ரூ.20
வெண்டைக்காய் – ரூ.30
நூக்கல் – ரூ.15
உருளைக் கிழங்கு – ரூ.25
முள்ளங்கி – ரூ.25
புடலங்காய் – ரூ.20
சுரைக்காய் – ரூ.25
பாகற்காய் – ரூ.20
கத்தரிக்காய் – ரூ.25
குடை மிளகாய் – ரூ.75
கேரட் – ரூ.40
காளிபிளவர் – ரூ.40
சவுசவு – ரூ.12
தேங்காய் – ரூ.30
வெள்ளரிக்காய் – ரூ.15
முருங்கைக்காய் – ரூ.40
இஞ்சி – ரூ.60
பச்சை மிளகாய் – ரூ.30
கோவைக்காய் – ரூ.30

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *