காய்கறி விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!

by -43 views

இரண்டு வாரங்களுக்கு முன்பு கனமழை காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. 10 நாட்களுக்கும் மேலாக விலையேற்றம் இருந்தது. அதன் பிறகு மழை பாதிப்பு குறைந்ததால் காய்கறிகளின் விலையும் குறையத் தொடங்கியது. இந்நிலையில் தற்போது கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு காய்கறிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று (நவம்பர் 20) ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாயாக உள்ளது. நேற்றும் இதே விலையில்தான் இருந்தது. வெங்காயம் விலை 30 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக அதிகரித்துள்ளது. பீன்ஸ் விலை 80 ரூபாயாகவும், வெண்டைக்காய் விலை 60 ரூபாயாகவும் உள்ளது. ஒரு கிலோ கேரட் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறி விலைப் பட்டியல்!

தக்காளி – ரூ.100
வெங்காயம் – ரூ40
அவரைக்காய் – ரூ.60
பீன்ஸ் – 80
பீட்ரூட் – ரூ.40
வெண்டைக்காய் – ரூ.60
நூக்கல் – ரூ.60
உருளைக் கிழங்கு – ரூ.35
முள்ளங்கி – ரூ.30
புடலங்காய் – ரூ.70
சுரைக்காய் – ரூ.80
பாகற்காய் – ரூ.70
கத்தரிக்காய் – ரூ.80
குடை மிளகாய் – ரூ.110
கேரட் – ரூ.45
காளிபிளவர் – ரூ.90
சவுசவு – ரூ.12
தேங்காய் – ரூ.32
வெள்ளரிக்காய் – ரூ.12
முருங்கைக்காய் – ரூ.120
இஞ்சி – ரூ.65
பச்சை மிளகாய் – ரூ.110
கோவைக்காய் – ரூ.60

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *