காய்கறி வாங்கலயா? ரேட் பார்த்து வாங்குங்க!

by -23 views

சென்னையில் சமீப காலமாகவே தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட முக்கியமான காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் சென்னை வாசிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். காய்கறி வாங்குவதற்காகவே தினமும் பெரிய தொகையை செலவு செய்ய வேண்டியதாக உள்ளது. ஏற்கெனவே பெட்ரோல் – டீசல் விலை உயர்வால் நொடிந்துபோயுள்ள சென்னை மக்களுக்கு இது மேலும் கவலை தருவதாக உள்ளது. எனினும் இன்று காய்கறிகளின் விலை உயர்த்தப்படவில்லை.

சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று (அக்டோபர் 24) ஒரு கிலோ தக்காளி விலை 40 ரூபாயாக உள்ளது. அதேபோல, வெங்காயம் விலை 40 ரூபாயிலிருந்து 35 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 40 ரூபாய்க்கும், பீட்ரூட் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கேரட் விலை 40 ரூபாயாகக் குறைந்துள்ளது.

காய்கறி விலைப் பட்டியல்!

தக்காளி – ரூ.40
வெங்காயம் – ரூ.35
அவரைக்காய் – ரூ.45
பீன்ஸ் – 50
பீட்ரூட் – ரூ.20
வெண்டைக்காய் – ரூ.35
நூக்கல் – ரூ.15
உருளைக் கிழங்கு – ரூ.25
முள்ளங்கி – ரூ.25
புடலங்காய் – ரூ.20
சுரைக்காய் – ரூ.20
பாகற்காய் – ரூ.25
கத்தரிக்காய் – ரூ.25
குடை மிளகாய் – ரூ.70
கேரட் – ரூ.40
காளிபிளவர் – ரூ.40
சவுசவு – ரூ.12
தேங்காய் – ரூ.30
வெள்ளரிக்காய் – ரூ.10
முருங்கைக்காய் – ரூ.40
இஞ்சி – ரூ.60
பச்சை மிளகாய் – ரூ.30
கோவைக்காய் – ரூ.30

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *