கல்லா கட்டிய FASTag கட்டண வசூல்!

by -169 views

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்துக் கிடப்பது பிரச்சினையாக இருந்து வந்தது. சுங்கக் கட்டணம் செலுத்துவதில் தாமதம், சில்லறை வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் வாகனங்கள் நீண்ட வரிசையில் மணிக் கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது. இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் ஃபாஸ்டாக் (FASTag) கட்டண முறை பிப்ரவரி 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

ஃபாஸ்டாக் மூலம் சுங்கக் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் என்பதால் சுங்கச் சாவடிகளில் நெரிசல் குறைந்துள்ளது. அதேபோல, இந்தப் புதிய நடைமுறை மூலமாக சுங்கச் சாவடிகளில் கட்டண மோசடி குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முறை அமல்படுத்தப்பட்ட ஒரே வாரத்தில் சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டண வசூல் 23 சதவீதம் அதிகரித்தது. இந்நிலையில், அக்டோபர் மாதத்துக்கான ஃபாஸ்டாக் சுங்கக் கட்டண வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.

வாட்ஸ் ஆப் மூலம் Fastag வாங்குவது எப்படி?
அதன்படி, அக்டோபர் மாதத்தில் மொத்தம் 214.23 மில்லியன் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதன்மூலம் ரூ.3,356 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த வசூல் ஃபாஸ்டாக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு மிகப் பெரிய மாதாந்திர வசூலாகும். முன்னதாக செப்டம்பர் மாதத்தில் ரூ.3,000 கோடி வசூல் செய்யப்பட்டிருந்தது. அப்போது மொத்தம் 193.6 மில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றன. அதேபோல, ஆகஸ்ட் மாதத்தில் 201.2 மில்லியன் பரிவர்த்தனைகளில் ரூ.122.81 கோடி கிடைத்தது.

கொரோனா ஊரடங்குப் பிரச்சினைகளுக்குப் பிறகு பொதுமக்களின் போக்குவரத்துப் பயணங்கள் அதிகரித்துள்ளதாலும், பொருளாதார நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளதாலும் சுங்கக் கட்டண வசூல் அதிகரித்துள்ளது. அதுவும் கொரோனா பிரச்சினைகளுக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

ஃபாஸ்டாக் அறிமுகம் செய்யப்பட்ட தொடக்கத்தில் அதை எப்படி ரீசார்ஜ் செய்வது என்றே நிறையப் பேருக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகமாக மேற்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *