கறி வாங்க போறீங்களா? இதுதான் விலை!!

by -60 views

சென்னையில் பெய்த கனமழை காரணமாக வெளி மாநிலங்களிலிருந்தும் மற்ற மாவட்டங்களில் இருந்தும் வரும் உணவுப் பொருட்களின் வரத்து குறைந்தது. இதனால் தேவை அதிகரித்து விலை உயர்வு ஏற்பட்டது. தற்போது மழை குறைந்து இயல்பு நிலை திரும்பிவருவதால் அசைவ உணவுகளின் விலை உயரவில்லை. முட்டை விலை மட்டும் ஏறவும் இறங்கவுமாக உள்ளது.

இறைச்சி விலை!

சென்னையில் ஒரு கிலோ சிக்கன் விலை 160 ரூபாயாக உள்ளது. அதேபோல, ஆட்டுக்கறி 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பீப் விலை 200 ரூபாயாகவும், காடை விலை 430 ரூபாயாகவும் உள்ளது. ஒரு கிலோ வாத்துக் கறி 425 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பன்றி இறைச்சி 350 ரூபாயாக உள்ளது.

முட்டை விலை!

முட்டை விலையைப் பொறுத்தவரையில், சென்னையில் முட்டை ஒன்று 4.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு 5 ரூபாய்க்கு முட்டை விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் முட்டை விலை ரூ.4.60 ஆக அதிகரித்துள்ளது. நாட்டுக் கோழி முட்டை ரூ.8 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மீன் விலை!

ஒரு கிலோ நெத்திலி மீன் 150 ரூபாய்க்கும், சீலா மீன் 350 ரூபாய்க்கும், வஞ்சரம் மீன் 700 ரூபாய்க்கும், வாவல் மீன் 600 ரூபாய்க்கும், சங்கரா மீன் 175 ரூபாய்க்கும், மத்தி மீன் 100 ரூபாய்க்கும், சுறா மீன் 350 ரூபாய்க்கும், ஜிலேபி 200 ரூபாய்க்கும், சால்மன் மீன் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நண்டு விலை 150 ரூபாயாகவும், இறால் விலை 300 ரூபாயாகவும் உள்ளது.

விலைப் பட்டியல்!

சிக்கன் – 160
மட்டன் – 600
பீப் – 200
காடை – 430
வாத்து – 425
பன்றி – 350
முட்டை – ரூ.4.90
நாமக்கல் முட்டை – ரூ.4.55
நாட்டுக் கோழி முட்டை – ரூ.8 முதல் ரூ.12
நெத்திலி – 150
சீலா – 350
வஞ்சரம் – 700
வாவல் – 600
சங்கரா – 175
மத்தி – 100
சுறா – 350
ஜிலேபி – 200
சால்மன் – 300
நண்டு – 150
இறால் – 300

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *