கம்முனு இருக்கும் தங்கத்தில் கும்முனு வருமானம்.. சூப்பரா சம்பாதிக்கலாம்!

by -34 views

ஹைலைட்ஸ்:

  • சும்மா இருக்கும் தங்கத்திலேயே செம வருமானம்
  • இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க

இந்தியர்கள் தங்கத்தில் பாரம்பரியமாகவே முதலீடு செய்து வந்துள்ளனர். அதிலும் பண்டிகைக் காலம் வந்துவிட்டால் தங்கத்தில் முதலீடு செய்வது வழக்கம். தங்கம் மூலம் ஏதோவொரு வகையில் வருமானம் ஈட்ட வேண்டுமென்பது முதலீட்டாளர்களின் விருப்பம்.

வீட்டில் பயன்படுத்தப்படாமல் சும்மா இருக்கும் தங்கத்தை வைத்தும் வருமானம் சம்பாதிக்க முடியும் என உங்களுக்கு தெரியுமா? பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தில் நீங்கள் உங்களிடம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தங்க நகை, தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள் போன்றவற்றை டெபாசிட் செய்து வட்டி வருமானம் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

அமேசானில் 70% தள்ளுபடி.. தீபாவளிக்கு சூப்பர் ஆஃபர்!
இந்தியாவில் வசிக்கும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். கூட்டு டெபாசிட்டுக்கும் (Joint deposit) அனுமதி உண்டு. குறைந்தபட்சம் 10 கிராம் தங்கமாவது டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்ச டெபாசிட்டுக்கு வரம்புகள் இல்லை.

குறுகிய கால டெபாசிட் (1-3 ஆண்டுகள்), நடுத்தர கால டெபாசிட் (5-7 ஆண்டுகள்), நீண்டகால டெபாசிட் (12-15 ஆண்டுகள்) என மூன்று வகையான கால வரம்புகளில் தங்கத்தை டெபாசிட் செய்யலாம்.

குறுகிய கால டெபாசிட்டுகளுக்கு 0.75% வரையிலும், நடுத்தர கால டெபாசிட்டுக்கு 2.25%, நீண்டகால டெபாசிட்டுக்கு 2.50% வட்டியும் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *