கம்மி விலையில் பைக் வாங்கலாம்… 50,000 ரூபாய் போதும்!

by -55 views

நிறையப் பேர் இப்போது பேருந்துகளிலும், ரயில்களிலும் பயணம் செய்யத் தொடங்கிவிட்டனர். வீட்டில் பைக், கார் இருந்தும் அதை எடுப்பதில்லை. காரணம், பெட்ரோல் – டீசல் விலையேற்றம்தான். லிட்டருக்கு 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மாத சம்பளத்தில் ஒரு பெரிய தொகையை இதற்காகவே செலவு செய்ய வேண்டியதாக உள்ளது. புதிதாக பைக் வாங்கலாம் என்று நினைத்தவர்கள் கூட இப்போது பெட்ரோல் விலையேற்றத்தால் யோசிக்கின்றனர்.

இதுபோன்ற சூழலில், பைக் வாங்க நினைப்பவர்கள் குறைந்த விலையில் தரமான வாகனங்கள் வாங்குவது அவசியம். அதுவும் அதிக மைலேஜ் தருவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் பெட்ரோல் விலை உயர்வைச் சமாளிக்க முடியும். இந்திய மோட்டார் பைக் சந்தையில் இப்போது விற்பனையாகிக் கொண்டிருக்கும் குறைந்த விலைகொண்ட அதிக மைலேஜ் தரும் வாகனங்கள்…

1.Hero HF 100

மைலேஜ் – 70 kmpl
விலை – ரூ.50,900

2.Bajaj CT100

மைலேஜ் – 89.5 kmpl
விலை – ரூ.53,696

3.TVS Sport

மைலேஜ் – 76.4 kmpl
விலை – ரூ.58,130

மேற்கூறிய விலை அந்த வாகனங்களின் ஆரம்ப விலைதான்.

இருசக்கர வாகனங்களை வாங்குவதற்கு முன்பாக, அவற்றின் சந்தை விலை, ஈஎம்ஐ வசதி, வங்கிக் கடன் வட்டி விகிதங்கள், செயல்பாட்டுக் கட்டணம் போன்ற பல்வேறு சம்பங்களை ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *