கம்மி விலைக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாம்! உடனே முந்துங்கள்!

by -23 views

இந்தியாவில் இப்போது பெட்ரோல் – டீசல் விலை உயர்வு என்பது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. தங்கத்தின் விலையை விட பெட்ரோல் விலைதான் அளவுக்கு அதிகமாக உயர்த்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். வாங்கும் சம்பளத்தில் பெட்ரோல், டீசலுக்கே பெரிய தொகை செலவிட வேண்டியதாக உள்ளது. இதனால் நிறையப் பேர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறத் தொடங்கிவிட்டனர். இது சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது என்பதால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போன்ற வாகனங்கள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

அதற்கு ஏற்றாற்போல நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இப்போது எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் ஈடுபடத் தொடங்கிவிட்டன. இவற்றின் விலையும் மிகக் குறைவாக இருப்பதால் அதிகப் பேர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கத் தொடங்கியுள்ளனர். 50000 ரூபாய் இருந்தாலே போதும்; எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உங்களுக்குச் சொந்தம். கோமாகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமும் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. 42,500 ரூபாய்க்கு நீங்கள் இங்கே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க முடியும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தாலே 85 கிலோ மீட்டர் வரை ஓடும்.

பைக் வாங்க சூப்பர் சான்ஸ்… 26,000 ரூபாய்க்கு பல்சர் பைக்!
இந்நிறுவனத்தின் கபிரா மொபிலிட்டி கொல்லேஜியோ ஸ்கூட்டர் விலை ரூ.45,990 ஆக உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் குறைந்தால் 100 கிலோ மீட்டர் வரை ஓடும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, 48,540 ரூபாய் விலை கொண்ட ரஃப்தார் எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டரும் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டருக்கு மேல் செல்கிறது. இதுபோல நிறைய மாடல்கள் வந்துவிட்டன. அதிக மைலேஜ் தருவதாகவும், குறைந்த விலையுடனும் உள்ளன. இதுபோன்ற விலை குறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நிறையப் பேர் வாங்குகின்றனர்.

கோமாகி க்‌ஷோன் ரூ.45,000, கோமாகி எக்ஸ்2 ரூ.47,000, வெலெவ் மோட்டார்ஸ் ரூ.32,500, ஆம்பியர் மேக்னஸ் புரோ ரூ.49,999 போன்ற ஸ்கூட்டர்களும் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *