கச்சா எண்ணெய் இறக்குமதி உயர்வு: பெட்ரோல் விலை குறையுமா?

by -35 views

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் நுகர்விலும் இறக்குமதியிலும் மூன்றாவது மிகப் பெரிய நாடாக உள்ள இந்தியா, சென்ற செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 17.61 மில்லியன் டன் அளவு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் செப்டம்பர் மாத இறக்குமதியை விட 16 சதவீதம் அதிகமாகும். இதுமட்டுமல்லாமல் கடந்த 5 மாதங்களில் இப்போதுதான் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா இவ்வளவு பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மாபெரும் வளர்ச்சியை எட்டியிருப்பதாக, மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கின. போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் பெட்ரோல் – டீசலுக்கான தேவை குறைந்ததால் கச்சா எண்ணெய் இறக்குமதியிலும் பின்னடைவு ஏற்பட்டது.

இன்றைய பெட்ரோல் விலை: மீண்டும் எகிறி அடித்த விலை நிலவரம்!
இந்நிலையில் தற்போது பொருளாதார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளதால் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் அதிகமான அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளன. சர்வதேச அளவில் எண்ணெய் சுத்திகரிப்பில் முன்னிலை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சென்ற செப்டம்பர் மாதத்தில் 12 சதவீதம் கூடுதலான அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. கச்சா எண்ணெய் மட்டுமல்லாமல் எண்ணெய் பொருட்கள் இறக்குமதியும் செப்டம்பர் மாதத்தில் 13 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில், அதற்கான இறக்குமதிச் செலவுகள் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. எனவே பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. சமீப காலமாகவே இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை உயர்வு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலுமே 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. விரைவில் 200 ரூபாயை நெருங்கும் என்று அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *