ஒரே பிரீமியம், வாழ் நாள் முழுவதும் பென்சன்!

by -62 views
ஒரே பிரீமியம், வாழ் நாள் முழுவதும் பென்சன்!
ஒரே பிரீமியம், வாழ் நாள் முழுவதும் பென்சன்!

உங்களுடைய கடைசிக் காலத்தில் கஷ்டமே இல்லாத வாழ்க்கை வாழ விரும்பினால் பென்சன் கிடைத்தால் உதவியாக இருக்கும். பென்சன் வாங்குவதற்கு அரசு வேலையில்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. பென்சன் திட்டங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் இப்போது நீங்கள் பணத்தைப் போட்டு முதுமைக் காலத்தில் நெருக்கடியே இல்லாத வாழ்க்கை வாழலாம்.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) உங்களுக்காக ஒரு சிறந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் முதலீடு செய்வதன் மூலம் உங்களது ஓய்வுக்கால செலவுகளை சமாளிக்கலாம். எல்.ஐ.சி.யின் ஜீவன் சாந்தி பாலிசி உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த பாலிசியில் உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன. முதலாவது, உடனடி பென்சன். இரண்டாவது விருப்பம் என்னவென்றால் நீங்கள் 5 ஆண்டு, 10 ஆண்டு, 15 ஆண்டு, 20 ஆண்டுகள் கழித்து பென்சன் பெறும் வசதி.

இந்தத் திட்டத்தின் கீழ் பென்சன் தொகை இதுதான் என்று நிர்ணயிக்கப்படவில்லை. உங்களுடைய முதலீட்டுத் தொகை, வயது ஆகியவற்றின் அடிப்படையில் பென்சன் கிடைக்கும். எல்ஐசியின் இந்த பாலிசியை குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 85 வயது வரை உள்ளவர்கள் எடுக்கலாம். இது தவிர, ஜீவன் சாந்தி திட்டத்தில் 1 வருடத்திற்குப் பிறகு கடன் பெறும் வசதியும் உள்ளது.

LIC: 900 ரூபாய் இருந்தா போதும்… நீங்க லட்சாதிபதி!
இந்த பாலிசியில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை பின்னர் மாற்ற இயலாது. பென்சன் தொகை முதலில் தேர்ந்தெடுத்த விருப்பத்திலேயே தொடர்ந்து கிடைக்கும். 37 வயது நிரம்பிய ஒருவர் இந்த பாலிசியை வாங்குவதாக இருந்தால் அவர் பிரீமியம் தொகையாக ரூ.20,36,000 செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தினால் உடனடியாக அவர் பென்சன் வாங்கலாம். அவருக்கு மாதத்துக்கு ரூ.10,067 என்ற அளவில் பென்சன் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *