ஒரே ஆண்டில் 135% லாபம்.. வாரி வழங்கிய பங்கு இதுதான்!

by -41 views
ஒரே ஆண்டில் 135% லாபம்.. வாரி வழங்கிய பங்கு இதுதான்!
ஒரே ஆண்டில் 135% லாபம்.. வாரி வழங்கிய பங்கு இதுதான்!

ஹைலைட்ஸ்:

  • ஒரு ஆண்டில் 135% லாபம்
  • அதிரடி காட்டிய ரேடிகோ கெய்தான்

பங்குச் சந்தை முதலீடுகளைப் பொறுத்தவரை நீண்டகால அடிப்படையிலான முதலீடுகளே சிறந்தவை என்பது நிபுணர்களின் அறிவுரை. அதாவது, பங்குகளை வாங்கி சில ஆண்டுகள் முதல் பல ஆண்டுகள் வரை வைத்திருந்தால் அதன் மதிப்பு கணிசமாக உயரும்.

நல்ல விலைக்கு ஏறியபின் விற்று லாபம் ஈட்டிக்கொள்ளலாம். பங்குச் சந்தை முதலீட்டில் ரிஸ்க்கை குறைக்க நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்வதுதான் சிறந்தது. இதன்படி, கடந்த ஒரே ஆண்டில் 135% லாபம் கொடுத்த பங்கு பற்றி பார்க்கலாம்.

ரேடிகோ கெய்தான் (Radico Khaitan) பங்கு கடந்த ஒரே ஆண்டில் தனது முதலீட்டாளர்களுக்கு செம லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. இந்தப் பங்கு கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே 135% லாபம் கொடுத்துள்ளது.

2003ஆம் ஆண்டு தேசிய பங்குச் சந்தையில் ரேடிகோ கெய்தான் பங்கு விலை 8.79 ரூபாய். இன்று காலையில் ரேடிகோ கெய்தான் பங்கு விலை 1090 ரூபாய். அதாவது, கடந்த 18 ஆண்டுகளில் ரேடிகோ கெய்தான் பங்கு 124 மடங்கு உயர்ந்துள்ளது.

Income Tax: ரீஃபண்ட் அனுப்பியாச்சு.. உங்களுக்கு வந்துருச்சா?
கடந்த ஒரே மாதத்தில் ரேடிகோ கெய்தான் பங்கு விலை 1022 ரூபாயில் இருந்து 1090 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது 6.65% லாபம் கொடுத்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இந்தப் பங்கு 570 ரூபாயில் இருந்து 1090 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 90% உயர்வாகும்.

கடந்த ஒரு ஆண்டில் ரேடிகோ கெய்தான் பங்கு விலை 462.70 ரூபாயில் இருந்து 1090 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது 135% லாபம் கொடுத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்பங்கு 125 ரூபாயில் இருந்து 1090 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது 775% லாபம்.

ரேடிகோ கெய்தான் பங்கில் ஒரு மாதத்துக்கு முன் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது 1.06 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும். ஒரு ஆண்டுக்கு முன் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது 2.35 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது 2.35 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும். 18 ஆண்டுகளுக்கு முன் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது 1.24 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *