ஒரு லட்சம் பேருக்கு வேலை… கலக்கும் ஐடி நிறுவனங்கள்!

by -17 views

கொரோனா தொல்லையிலிருந்து மீண்டு இப்போதுதான் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. நிறுவனங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட முன்புபோல் இயங்கத் தொடங்கிவிட்டன. கொரோனா பிரச்சினை வந்தபோது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதித்தன. இதனால் வேலையின்மைப் பிரச்சினையில் ஊழியர்கள் சிக்கவில்லை. தற்போது இயல்பு நிலை திரும்பி மீண்டும் அலுவலகத்துக்கு வந்து வேலைபார்த்து வருகின்றனர்.

ஊழியர்களின் சம்பள உயர்வு, ஊக்கத் தொகை, பணி உயர்வு போன்றவற்றிலும் நிறுவனங்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. இதுமட்டுமல்லாமல் புதிய வேலைவாய்ப்புகளும் அதிகப் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவிலும் கொரோனா பிரச்சினைகள் குறைந்து தகவல் தொழில்நுட்பச் சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் ஐடி நிறுவனங்கள் புதிய உத்வேகத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களாக டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் ஆகியவை பணியமர்த்தல்களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேற்கூறிய நான்கு நிறுவனங்களும் இணைந்து 2021 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் மட்டும் மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்கியுள்ளன. இந்த எண்ணிக்கையானது 2020 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 13 மடங்கு அதிகமாகும். கொரோனா வருவதற்கு முன்பு 2019ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை விடவும் இது இரு மடங்கு அதிகமாகும். தகவல் தொழில்நுட்பச் சேவைகளுக்கு எழுந்துள்ள அதிகமான தேவையால்தான் இந்த அளவுக்கு வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Gold rate: 400 ரூபாய் சரிவு… தங்கம் வாங்க நல்ல நேரம்!

கொரோனா வந்தபிறகு சர்வதேச அளவில் டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. அடுத்து வரும் மாதங்களிலும் ஐடி துறையில் இன்னும் நிறையப் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *