ஒரு நாளைக்கு 153 கோடி வருமானம்.. யார் இந்த ஜெய் சவுத்ரி?

by -31 views

ஹைலைட்ஸ்:

  • தினசரி 153 கோடி வருமானம்
  • யார் இந்த ஜெய் சவுத்ரி?

இந்தியாவின் டாப் பணக்காரர்களின் பட்டியலை Hurun India – IIFL இணைந்து வெளியிட்டுள்ளன. இதில் சில புது முகங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ஜெய் சவுதரி என்பவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். யார் இந்த ஜெய் சவுத்ரி?

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இயங்கி வரும் சைபர் பாதுகாப்பு நிறுவனம் Zscaler. இந்நிறுவனத்தின் நிறுவனர்தான் ஜெய் சவுத்ரி. இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் ஜெய் சவுத்ரி முதல் முறையாக இடம்பிடித்துள்ளார்.

ஜெய் சவுத்ரி தினமும் சுமார் 153 கோடி ரூபாய் சம்பாதிப்பதாக இந்த ரிப்போர்ட் கூறுகிறது. இந்தியாவில் இமாசலப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர் ஜெய் சவுத்ரி. இவர் ஐஐடியில் படித்தவர். கடந்த 2007ஆம் ஆண்டில் ZScaler நிறுவனத்தை ஜெய் சவுத்ரி தொடங்கினார்.

ஏர் இந்தியாவை வாங்கும் டாடா.. மத்திய அரசு கிரீன் சிக்னல்!
அண்மைக்காலமாக சைபர் தாக்குதல்கள், மோசடிகளின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, சைபர் பாதுகாப்புக்கான தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஜெய் சவுத்ரியின் சொத்து மதிப்பு 85% உயர்ந்துள்ளதாக இந்த ரிப்போர்ட் கூறுகிறது.

தற்போது Zscaler நிறுவனத்தில் சர்வதேச அளவில் சுமார் 1600 ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இதுபோக AirDefense, CipherTrust, CoreHarbor, SecureIT போன்ற பல்வேறு நிறுவனங்களையும் ஜெய் சவுத்ரி உருவாக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *