ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி? 15x15x15 விதி பற்றி உங்களுக்கு தெரியுமா?

by -47 views
ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி? 15x15x15 விதி பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி? 15x15x15 விதி பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஹைலைட்ஸ்:

  • ஒரு கோடி ரூபாய் பணம் சம்பாதிக்க ஐடியா
  • 15x15x15 விதி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

சிறு முதலீட்டாளர்கள் ஒரு கோடி ரூபாய் நிதி தயார் செய்வதற்கு என்ன செய்யலாம். இதற்கு 15x15x15 விதியை பயன்படுத்தி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பதே நிபுணர்களின் அட்வைஸ்.

15x15x15 விதி என்றால் என்ன? எக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் 15% வட்டிக்கு, 15 ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு மாதமும் 15000 ரூபாய் முதலீடு செய்வதே 15x15x15 விதி. இப்படி முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்துவிடலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்யும்போது நல்ல வருமானம் ஈட்ட முடியும். குறிப்பாக SIP முறையில் முதலீடு செய்தால் நீண்டகால அடிப்படையில் லாபம் எகிறும். இதில் 15x15x15 விதியை சரியாக பயன்படுத்தினால் ஒரு கோடி சம்பாதிக்கலாம்.

குழந்தைகளுக்கும் பான் கார்டு வாங்கலாம்.. எப்படின்னு தெரியுமா?
15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 15000 ரூபாய் முதலீடு செய்தால் ஒட்டுமொத்தமாக 27 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறோம். இதற்கு 15% வட்டி கிடைத்தால், 14 ஆண்டுகளில் 74.5 லட்சம் ரூபாய் வட்டி மூலம் கிடைக்கும். ஆக, 15 ஆண்டுகள் இறுதியில் மொத்தம் 1,01,50,000 கோடி ரூபாய் கிடைக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகளைப் பொறுத்தவரை, எவ்வளவு விரைவாக தொடங்குகிறோமோ, அவ்வளவும் அதிக லாபம் தரும். தொடர் முதலீடும், நிதானமும், பொறுமையும் இருந்தால் நிச்சயம் ஒரு கோடி இலக்கை உறுதியாகத் தொடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *