ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து… இந்த விஷயத்தில் கவனம் தேவை!

by -24 views

தொழில்நுட்ப வசதிகள் வளர வளர அதன் மூலமாக மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. எங்கு பார்த்தாலும் ஆன்லைன் மோசடிதான். அதுவும் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு நிறையப் பேர் ஆன்லைன் பரிவர்த்தனைகளைத்தான் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் மோசடியில் மிகவும் கவனமுடன் இருக்கும்படி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் தனது வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். ஏர்டெல் நெட்வொர்க்கின் சுமார் 350 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் கேஒய்சி முறையில்தான் இந்த மோசடிகள் அதிகமாக நடைபெறுகின்றன. இதில் உஷாராக இருக்க வேண்டும் என்று ஏர்டெல் வாடிக்கையாளர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

கேஒய்சி படிவத்தைப் புதுப்பித்துத் தருவதாகக்கூறி தங்களை ஏர்டெல் அதிகாரி என்று கூறிக் கொண்டு மோசடியாளர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றுகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து ஓடிபி நம்பர் உள்ளிட்ட விவரங்களைத் தரும்படி அவர்கள் கேட்கின்றனர். இது மோசடி என்று தெரியாத வாடிக்கையாளர்கள் தங்களது தகவல்களை வழங்கி விடுகின்றனர். கொரோனா ஊரடங்குக்குப் பிறகு இதுபோன்ற கேஒய்சி மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

வெறும் 29 ரூபாய் போதும்! ரூ.4 லட்சம் சம்பாதிக்கலாம்! பெண்களுக்கான சூப்பர் திட்டம்!
மக்கள் இப்போது தங்களது மொபைல் போன்களில் அதிக நேரத்தை செலவிடத் தொடங்கியுள்ளனர். இதனால் இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வருகின்றன. ஏர்டெல் நெட்வொர்க் சார்பாக மட்டுமல்லாமல், வங்கி அதிகாரிகள் போல பாவனை செய்து மோசடி செய்யும் சம்பவங்களும் அதிகரித்துவிட்டன. இதனால் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படுகிறது. இந்த விஷயத்திலும் விழிப்புடன் இருக்கும்படி எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மோசடிகளை அடையாளம் காண முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *