ஏடிஎம் கார்டு இருந்தா 10 லட்சம் கிடைக்கும்!

by -101 views

வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்கியவுடன் ஏடிஎம் கார்டு வழங்கப்படும். அந்த ஏடிஎம் கார்டை வைத்து நம்முடைய வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கலாம். இதுமட்டுமல்லாமல், ஏடிஎம் கார்டை வைத்து ஷப்பிங் செய்வது போன்ற பல தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். ஏடிஎம் கார்டின் பயன்கள் அவ்வளவுதானா என்றால், இல்லை. ஏடிஎம் கார்டுக்கு காப்பீடும் கிடைக்கிறது. யாருடைய பெயரில் ஏடிஎம் கார்டு இருக்கிறதோ அவர் உயிரிழந்துவிட்டாலோ அல்லது பெரிய விபத்து ஏற்பட்டாலோ அதற்கு வங்கிகள் காப்பீடு வழங்குகின்றன.

அரசு வங்கியாக இருந்தாலும் தனியார் வங்கியாக இருந்தாலும் கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் காப்பீடு வழங்குகின்றன. இந்த காப்பீட்டுத் தொகை ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும். சில வங்கிகள் ஏடிஎம் கார்டு மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டுகளுக்கும் காப்பீடு வழங்குகின்றன. இந்த காப்பீடைப் பெறுவதற்கு ஏடிஎம் கார்டு ஹோல்டர் இறந்துவிட்டார் என்பதை சம்பந்தப்பட்ட வங்கியில் சென்று இறந்தவரின் குடும்ப உறுப்பினர் அல்லது நாமினி தெரிவிக்க வேண்டும். உயிரிழந்த இரண்டு முதல் ஐந்து மாதங்களில் இதைத் தெரிவிக்க வேண்டும்.

இந்த பேங்க் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 லட்சம் கிடைக்கும்!!
அந்த நபர் கடைசி 60 நாட்களில் அந்த வங்கிக் கணக்கில் பணப் பரிவர்த்தனை செய்தாரா என்று வங்கி தரப்பிலிருந்து பரிசோதனை செய்யப்படும். எல்லாம் சரியாக இருந்தால் காப்பீடு வழங்கப்படும். எவ்வளவு காப்பீடு கிடைக்கும் என்று வங்கிக்கே சென்று விசாரிக்கலாம். இந்தக் காப்பீடைப் பெறுவதற்கு உயிரிழந்த அல்லது விபத்துக்கு உள்ளான நபரின் ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் காப்பீடு கிடைக்கும். உயிரிழப்பு விஷயத்தில் அவரது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், போலீஸ் ரிப்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் போன்றவை கட்டாயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *