எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. இனி எக்ஸ்ட்ரா பணம் கட்டணும்!

by -47 views
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. இனி எக்ஸ்ட்ரா பணம் கட்டணும்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. இனி எக்ஸ்ட்ரா பணம் கட்டணும்!

ஹைலைட்ஸ்:

  • எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இப்படியொரு ஷாக்
  • இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்

எஸ்பிஐ வங்கி (State Bank of India) தனது வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு பிராசஸிங் கட்டணமும் (Processing fee), வரியும் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கிரெடிட் கார்டு EMI கட்டணங்களுக்கு 99 ரூபாய் பிராசஸிங் கட்டணமும், வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என எஸ்பிஐ கார்டு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்புதிய கட்டணம் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

நேரடி ஷாப்பிங் போதும், அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற வர்த்தக இணையதளங்களிலும் பொருட்களை வாங்கிவிட்டு கிரெடிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் செலுத்தியிருந்தால், EMI கட்டணங்களுக்கு பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படும் என எஸ்பிஐ கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோட்டு கிழிந்தாலும் பணம் கிடைக்கும்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
இதுகுறித்து எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நேற்று இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, எல்லா EMI கட்டணங்களுக்கும் வட்டியுடன் சேர்த்து 99 ரூபாய் பிராசஸிங் கட்டணமும், வரியும் செலுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *