எல்லாருக்கும் சம்பள உயர்வு.. இந்திய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

by -32 views

ஹைலைட்ஸ்:

  • இந்திய ஊழியர்களுக்கு அதிக சம்பள உயர்வு
  • அடுத்த ஆண்டில் நடக்கப்போகும் சம்பவம்

கொரோனா நெருக்கடி தணிந்து பொருளாதாரம் படிப்படியாக புத்துயிர் பெற்று வரும் நிலையில், இந்திய ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டில் சம்பளமும் உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டில் பெரிய சம்பள உயர்வுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

சர்வதேச ஆலோசனை நிறுவனமான வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் ‘Salary Budget Planning Report’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 2022ஆம் ஆண்டில் இந்திய ஊழியர்களுக்கு 9.3% சம்பள உயர்வு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டில் இந்திய ஊழியர்களுக்கு 8% சம்பள உயர்வு கிடைத்துள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. அடுத்த 12 மாதங்களில் தொழில் செயல்பாடுகள் கணிசமாக முன்னேறும் எனவும், ஆசியா – பசிபிக் பிராந்தியத்திலேயே இந்தியாவில் அதிக சம்பள உயர்வு கிடைக்கும் எனவும் இந்த ரிப்போர்ட் கூறுகிறது.

உங்ககிட்ட ஒரு ரூபாய் இருக்கா? 10 கோடி கிடைக்கும்!
பல இந்திய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க திட்டமிட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. மேலும், பல்வேறு துறைகளை சேர்ந்த 30% நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களில் புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *