எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஓலாவுக்கு போட்டியாக ரோட்டில் இறங்கிய டார்வின்!

by -51 views
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஓலாவுக்கு போட்டியாக ரோட்டில் இறங்கிய டார்வின்!
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஓலாவுக்கு போட்டியாக ரோட்டில் இறங்கிய டார்வின்!

இந்தியாவில் இப்போது பெட்ரோல் – டீசல் விலையேற்றம் என்பது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. வாங்கும் சம்பளத்தில் பெரிய தொகையைப் பெட்ரோலுக்காகவே செலவிட வேண்டியிருக்கிறது. இதனால் நிறையப் பேர் பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். அதேபோல புதிதாக வாகனங்கள் வாங்க நினைப்பவர்களின் பார்வை எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளது.

இந்தியாவில் இப்போது எலெக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றாற்போல பல்வேறு அம்சங்களுடன் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. சமீபத்தில்தான் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் S1 மற்றும் S1 pro ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்த்தது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரெடி: தீபாவளி முடிந்ததும் கொண்டாட்டம்!!
ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.99,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஓலா எஸ்1 புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1.30 லட்சம். இவற்றுக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக சந்தையில் புதிதாக மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைக் களமிறக்கியுள்ளது டார்வின் நிறுவனம். D-5, D-7 மற்றும் D-14 ஆகிய ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

D-5 ஸ்கூட்டரின் விலை – ரூ.68,000
D-7 ஸ்கூட்டரின் விலை – ரூ.73,000
D-14 ஸ்கூட்டரின் விலை – ரூ.77,000

ஜப்பான் நாட்டின் தரம் மற்றும் இந்திய ரசிகர்களைக் கவரும் அம்சங்கள் என இந்த மூன்று ஸ்கூட்டர்களும் இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்களை வெகுவாகக் கவரும் என்று டார்வின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே பஜாஜ் சீட்டாக், சிம்பிள் ஒன், ஆதெர் 450எக்ஸ், டிவிஎஸ் ஐ-கியூஸ் உள்ளிட்ட ஸ்கூட்டர்கள் இந்திய எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது டார்வின் ஸ்கூட்டர்களும் அந்த வரிசையில் இணைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *