எலெக்ட்ரிக் வாகன பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! அட்டகாசமான பிரிட்டிஷ் மாடல்!

by -39 views
எலெக்ட்ரிக் வாகன பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! அட்டகாசமான பிரிட்டிஷ் மாடல்!
எலெக்ட்ரிக் வாகன பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! அட்டகாசமான பிரிட்டிஷ் மாடல்!

இந்தியாவில் இப்போது வாகன ஓட்டிகளின் பார்வை எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பெட்ரோல் – டீசல் விலையேற்றத்தால் வழக்கமான பெட்ரோல், டீசல் எஞ்சின் கொண்ட வாகனங்களை விட்டுவிட்டு பேட்டரிகளில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கிப் பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் கவர்ச்சிகரமாகவும் உள்ளன. பராமரிப்புச் செலவுகளும் குறைவுதான். சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது. இதனால் சிறந்த, விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் கார்களையும் மக்கள் தேடத் தொடங்கியுள்ளன. அதற்கு ஏற்றாற்போல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் புதிது புதிதாக எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன.

499 ரூபாய்க்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாம்! சூப்பர் ஆஃபர்!!
இதுமட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் வாகனப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக பிரிட்டிஷ் மாடல் எலெக்ட்ரிக் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒன் மோட்டோ நிறுவனம் சார்பாக மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவுக்கு வருகின்றன. கம்யூட்டா, எலெக்டா, பைக்கா ஆகிய மூன்று ஸ்கூட்டர்கள் அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படுகின்றன.

கம்யூட்டா ஸ்கூட்டரின் விலை ரூ.1.20 லட்சமாகவும், பைக்கா மற்றும் எலெக்டா ஸ்கூட்டர்களின் விலை ரூ.1.85 லட்சமாகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்னும் பல மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனவும், இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டியை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *